animated gif how to

''உம்மாவுடன் பேச சல்லி செலவாகுமே'' - சகோதரி ரிஸானாவின் நாகரீகம்

July 24, 2011 |

July 24, 2011.... AL-IHZAN Local News

சகோதரி றிஸானா நபீக் சிறைவைக்கப்பட்டுள்ள சிறைக்கு அடிக்கடி சென்றுவரும் இலங்கையைச் சேர்ந்த டாக்டர் கிபாயா இப்திகார் ஆங்கில இணையத்திற்கு வழங்கிய செவ்வியே இது. பின்னர் அது அச்சு ஊடகமொன்றிலும் வெளியாகியிருந்து. மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே சகோதர வலைதளமான யாழ் முஸ்லிம் பதிவேற்றம் செய்திருந்தது.நன்றியுடன் இதணை எமது அல்-இஹ்ஸான் வலைதள வாசகர்களுக்காகவும் பதிவேற்றம் செய்கின்‌றோம்.

ரிஸானா நபீக்

முகவரி - சிறிநகர், மூதூர், இலங்கை.
தற்போதைய முகவரி - அல் தவாத்மி சிறைச்சாலை, சவூதி.
பிறப்பு - 1988.02.02
போலிப் பிறப்பு - 1982.02.02
சம்பவ தினம் - 2005.05.22 ஞாயிறு பி.ப. 12.30
குற்றச்சாட்டு - 4 மாதக் குழந்தை கொலை தொடர்பானது
முதல் தீர்ப்பு - 2007.06.16
தணடனை - மரணம்
அப்பீல் தீர்ப்பு - முன்னைய தீர்ப்பை உறுதி செய்கிறது.


உங்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா?

நான் இலங்கை கண்டியை சேர்ந்தவள். கடந்த 9 வருடங்களாக ரியாத்தில் டாக்டராக தொழில் செய்கிறேன். எனது கணவர் ஒரு எஞ்சினியர். அவரும் சவூதி அரேபியாவில் தொழில் செய்கிறார். எங்களுக்கு ஒரு பெண் பிள்ளை அவரும் சவூதியில் கல்வி கற்கிறார்.

எங்கள் கேள்விகளுக்கு உங்களால் சுதந்திரமாக பதிலளிக்க முடியுமா அல்லது உங்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா?

நான் எவருக்கோ எந்த அமைப்பிற்கோ கட்டுப்பட்டவள் அல்ல. தன்னிச்சையாக ரிஸானா விடயத்தில் நான் ஈடுபட்டு வருகிறேன். எனது மனிதநேயத்தை கணவர் நன்றாக புரிந்து வைத்திருப்பது இதுவிடயத்தில் எனக்கு ஈடுபட முடிகிறது.

ரிஸானா வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கும் நீங்கள் தொழில் பார்க்குமிடத்திற்கும் எவ்வளவு தூரம்?

அவர் அல் தவாத்மியில் அமைந்துள்ள சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். எனக்கு அங்கு செல்லத்தூரம் 400 கிலோ மீற்றர். மொத்த பிரயாணத் தூரம் 800 கிலோ மீற்றர். அதற்கான நேரச் செலவு 8 மணித்தியாலங்கள். அதுவும் வெறும் பாலைவனத்தில் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. சவூதியில் பெண்கள் வாகனம் ஓட்ட முடியாதிருப்பதால் வழித்துணைக்கு நான் இன்னுமொரு பெண்ணை சேர்த்து கொள்வேன்.

எத்தனைமுறை நீங்கள் ரிஸானாவை இதுவரை சந்தித்திருக்றீர்கள்?

துல்லியமாக சொல்ல ஞாபகமில்லை. குறைந்தது 15 தடவைகளாவது சந்தித்திருப்பேன்.

சவூதி அரேபிய சட்டங்கள் கடினமானது என விமர்சனங்கள் இருக்கின்றபோது நீங்கள் இத்தனை முறைகள் சந்திப்பது எப்படிச் சாத்தியம்?

இன்னுமொரு நாட்டுச் சட்டதிட்டங்களை விமர்சனம் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. ஷரீஆ சட்டத்தைப் புரியாமல் சிலர் இப்படிப் பேசுகிறார்கள். ரிஸானா விடயத்தி; நான் ஆர்வமாக இருப்பதால் நான் அவரை சந்திக்க அனுமதி கேட்ட போதெல்லாம் அதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி இருக்கிறார்கள்.


சவூதியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் எனக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். நான் ரிஸானாவை பார்க்கப்போக வேண்டுமென அவர்களுக்கு அறிவித்தால் உடனே காரையும் சாரதிகளையும்கூட அவர்கள் அனுப்பிவைப்பார்கள். இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.



சிறைச்சாலை என்றதும் நமது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளையும் இரும்புக் கம்பிகளையும் கைவிலங்கிடப்பட்ட இரும்புச் சங்கிலிகளையும் கற்பனைக் பண்ணிக்கொண்டுதான் இங்குள்ளவர்கள் விமர்சனங்களை செய்து வருகின்றனர். ஆனால் ரிஸானா வைக்கப்பட்டுள்ள சிறை அப்படிப்பட்டதல்ல. அது ஒரு வீட்டுச் சூழல் போன்றது.


சில சந்தர்ப்பங்களில் அங்குள்ள அதிகாரிகள் நான் வந்திருப்பதை அறிந்துகொண்டு அவர்களது காரியாலயத்தில் என்னை அமரவைத்துக்கொண்டு ரிசானாவை அழைத்துவந்து தருவார்கள். மிகுந்த மனித நேயத்துடனே அவர்கள் ரிஸானா விடயத்தில் நடந்து கொள்கிறார்கள்.

நீங்கள் ரிஸானாவை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் ரிஸானா உங்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது பற்றி விபரிக்க முடியுமா?

ரிஸானா மிகவும் தெளிந்த மனநிலையில் காணப்படுகிறார். சில சந்தர்ப்பங்களில் என்னi நோனா என அழைப்பாள். நான் அவளிடத்தில் நெருக்கமாக பேசும்போது என்ளை சிறிய தாயார் (சாச்சி) என்றுகூட உரிமையுடன் பேசுவாள். உம்மாவுக்கு பேச வேண்டுமா? எனக்கேட்டால் நோனா உங்களுக்கு சல்லி செலவாகுமே என்று என்னிடத்தில் கேள்வி எழுப்புவாள். வறுமைக்குட்பட்ட குடும்பத்தில் ரிஸானா பிறந்தாலும் என்னிடத்தில் நாகரீகமாக நடந்து கொள்வாள். மூதூரிலுள்ள தாயாருக்கு பேச தொலைபேசியைக் கொடுத்தால் தாயும் பிள்ளையும், சில சமயங்களில் உறவினர்களும் கூட அவளிடத்தில் பேசுவார்கள். அவளது தாயாரும் இறைபக்தி மிக்கவர். ரிஸானாவுக்கு சிறைச்சாலையில் தொழுவதற்கும், நோன்பு நோற்பதற்குமான அனைத்து வசதிகளையும் சிறைச்சாலை அதிகாரிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ரிஸானாவின் பொழுதுபோக்கு சிறைச்சாலையில் எப்படி கழிகிறது?

இறை கடமைகளை தவறாது செய்வதுடன் வீட்டிற்கு கடிதம் எழுதுவது ஏதாவது பின்னால் வேலைகளைச் செய்வது போன்றவற்றில் அவளது நேரம் கழிகிறது. இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். ஒருமுறை நான் அவளை பார்க்க சிறைக்கு சென்று திரும்ப முயற்சித்தபோது என்னிடத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்தாள். நான் ஒரு கம்பளத்தை பின்னி இருக்கிறேன். இதனை உம்மாவுக்கு அனுப்பவைக்க வழி பண்ண முடியுமா என்று கேட்டாள். கம்பளத்தைப் பார்த்துவிட்டு யார் கொடுத்தார்கள் எனக்கேட்டேன். எனக்கு மாதாந்தம் 64 ரியாழ்கள் தருவார்கள் அதனைக் கொண்டு நூல்களை வாங்கித்தான் இதனை செய்தேன் என்று கூறினாள். அப்பொழுதுதான் எனக்கு தெரியவந்தது இவளுக்குப் பினனல் வேலைகள் தெரியும் என்பதும், கைதிகளுக்கு மாதாந்தம் 64 ரியாழ்களை வழங்குகிறார்கள் என்பதும்.

ரிஸானா தண்டனை விடயத்தில் சவூதி ஊடகங்களினதும், சமூகத்தினதும் கருத்து எப்படி இருக்கிறது?
80 முதல் 90 சதவீதமான அபிப்பிராயங்கள் அவள் விடுதலையை ஆதரிப்பதாக அமைகிறது.

ரிஸானா சிறு வயதுக்காரி. அவளுக்கு இந்தத் தண்டனை கூடாது என்றதொரு அபிப்பிராயம் இருக்கின்றதே என்று கேட்டபோது?
சவூதி அரேபிய பதிவுகளும் இலங்கை கடவுச் சீட்டிலும் அப்படியில்லை. எனவே அவள் சிறுமி என்ற வாதத்திற்கே இடமில்லை. தவறு எங்கோ நடந்துவிட்டது.

ரிஸானா விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடத்தப்படுகின்றனவே. இவை அவர் விடுதலைக்கு எந்தவகையில் தாக்கத்தைச் செலுத்தும்?
இது  மிகமோசமான பின்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் இந்த நடவடிக்கைகள் ஒருபோதுமே அவர் விடுதலைக்கு உதவமாட்டாது. மாறாக இது ரிஸானாவிற்கு ஆபத்தையே உண்டு பண்ணும்.

இலங்கை அரசு ரிஸானா விடுதலைக்காக எதுவுமே செய்யவில்லை என்று எதிரணி அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுகின்றனரே. சவூதியில் இதுவிடயத்தில் கதாநாயகியாகச் செயலாற்றும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள?
அரசியல் பற்றி எனக்கு எதவும் தெரியாது. அதில் எனக்கு ஆர்வமும் கிடையாது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. அவர்கள் என்னதான் முயற்சித்தாலும் சட்டம், தீர்ப்பு என்று இப்போத முடிவாகி இருக்கிறது. சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் தலையிட்டு இருக்கும்போது ஒன்றும் செய்யவில்லை என்றவாதம் அரசியல் மேடைகளுக்கும், கோஷங்களுக்கும் உதவுமே தவிர ரிஸானா விடுதலைக்கு அவை ஒருபோதுமே உதவ மாட்டாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸகூட சவூதி மன்னரிடத்தில் ரிஸானாவிற்கு மன்னிப்பு கொடுக்கும்படி ஒரு உருக்கமான கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் ரிஸானா விடயத்தில் மன்னரின் கவனத்தை ஈர்க்குமென நம்புகிறேன். என்றாலும் மன்னருக்குக்கூட மன்னிப்பு வழங்க முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து அவர்களிடத்தில் மன்னிப்பு தொடர்பான வேண்டுகோளைத்தான் அவரும் விடுக்கமுடியும். அந்த விடயம் மட்டுமே நடைபெற வேண்டியிருக்கிறது. ரிஸானாவின் தலைவிதி இறைவன் கரங்களில்தான் தற்போது இருக்கின்றது.

நீஙகள் ரிஸானாவை கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்? 

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்.


ரிஸானாவுக்கு மன்னிப்பு எவ்வளவு தூரம் சாத்தியம் என நீங்கள் கருதுகிறீர்கள்?
80 சதவீதம் நம்பிக்கை எனக்கிருக்கிறது. சவூதி மீதான விமர்சனங்களும், கண்டனங்களும் இலங்கைக்கு மட்டுமல்ல ரிஸானா விடுதலைக்காக முயல்கின்ற எம்போன்றவர்களுக்கும் இக்கட்டை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட தரப்பை ஆத்திரமூட்டுவதை தவிர்த்து அதுவிடயத்தில் மன்றாட்டங்களும், பிரார்த்தனைகளுமே தேவை.

ரிஸானாவின் பெற்றோரை நீங்கள் தொடர்புகொண்டு வருகிறீர்களா?

நான் இலங்கை சென்றிருந்தபோது ரிஸானாவின் பெற்றேர்களை எனது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு தைரியமும், ஆறுதல்களையும்கூட சொன்னேன். அவர்கள் ஏழைகளாக இருந்தபோதும் மிகவும் கௌரவமானவர்கள். நல்லதொரு கதையைச் சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு சமயம் செலான் வங்கி உரிமையாளரும், பிரபல கோடிஸ்வரருமான  லலித் கொத்தலாவலை ரிஸானாவின் குடும்ப நிலையையும், அவரது மின ஏழ்மையான  வீட்டையும் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு கொழும்புக்கு சமீபமாக ஒரு வசதியான வீட்டைக்கொடுக்க முன்வந்தார். ஆனால் ரிஸானாவின் பெற்றோர் அதனை நிராகரித்துவிட்டமை மட்டுமல்லாது எமது பிள்ளையின் விடுதலைதான் எமக்கு தேவை வசதி வாய்ப்புகள் எமக்குத் தேவையில்லை என்று சொல்லியதை நான் அறிவேன்.

தீர்ப்பு தொடர்பாக அப்பீல் செய்யப்பட்டதே அதற்கு என்ன நடந்தது?

சிறிது நேரம் மௌனமாகிறார் டாக்டர் கிபாயா. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதில் எனக்கு பெருத்தமான அழுத்தங்கள் இருக்கின்றன. என்றாலும் மறைக்காது உண்மையைச் சொல்வதைத் தவிர வேறுவழி எனக்கு தெரியவில்லை.  அப்பீல்  தீர்ப்பும் முன்னைய  தீர்ப்பை உறுதிசெய்துவிட்டது. இதில் வேதனையான விடயம் என்னவென்றால் இந்த விடயம் இதுவரை ரிஸானாவிற்கு இன்னும் தெரியாது. தீர்ப்பை நான் எனது கண்களாலே பார்த்துவிட்டேன. அவள் விடுதலை என்ற நம்பிக்கையில் வாழ்கிறாள்.
(றிஸானா அதிர்ஷ்டவசமாக மரண தண்டனையிலிருந்து தப்பிக்கொள்வாரேயானால் அதற்காக நினைவு கூறப்பட வேண்டியவரும், தீர்ப்புப்படி அவளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமாயின் அதற்காக அதிகம் துன்பப்படுபவரும் டாக்டர் கிபாயா இப்திகாரகத்தான் இருக்க முடியும்)

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!