July 05, 2011.... AL-IHZAN World News
ஆயிரக்கணக்கான போஸ்னிய முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த செர்பியாவின் போர்க்குற்றவாளி ரத்கோ மிலாடிச்சை விசாரணையின் இடையே நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் மிலாடிச் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது கலகம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார். எச்சரிக்கைகளை புறக்கணித்து தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மிலாடிச்சை பிடித்து வெளியேற்றுமாறு உத்தரவிட நீதிபதிக்கு நிர்பந்தம் ஏற்பட்டது என பி.பி.சி தெரிவிக்கிறது....
இனப்படுகொலை, கொலை உள்பட 11 குற்றங்கள் இனவெறியன் மிலாடிச்சின் மீது சுமத்தி நீதிபதி வாசித்தார். மிலாடிச் இரண்டாவது முறையாக நீதிமன்றத்திற்கு வருகிறான். ஜுன் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான மிலாடிச் தனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்....
1992-95 காலக்கட்டத்தில் 7500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த மிலாடிச் போர்க்குற்றத்திற்கான விசாரணையை எதிர்கொள்கிறார். பல வருடங்களாக தலைமறைவாக இருந்த மிலாடிச்சை செர்பிய போலீஸ் சமீபத்தில் கைது செய்தது.
News: .thoothu
News: .thoothu
RSS Feed
July 05, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment