July 05, 2011.... AL-IHZAN World News
சில வாரங்களுக்கு முன்பு செயற்கை கோளை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்திய ஈரான் அடுத்த மாதம் குரங்கை விண்வெளிக்கு அனுப்ப தயாராகிறது. ஈரானின் விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைவர் ஹாமித் பஸேயலியை மேற்கோள்காட்டி தேசிய செய்தி ஏஜன்சியான இர்னா நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.
ஐந்து குரங்குகளை இதற்காக பயிற்றுவிப்பதாக ஹாமித் ஃபஸேயலி தெரிவித்துள்ளார். உள்நாட்டில் நிர்மாணித்த 285 கிலோ கிராம் எடையை கொண்ட கவோஷ்கர்-5 ராக்கெட்டில் குரங்கு விண்வெளிக்கு அனுப்பப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் தங்களின் ஃபஜ்ர் (அதிகாலை), ரஸாத் (கண்காணிப்பு), ஸஃபர் (வெற்றி), அமீர்கபீர்-1, கவோஷ்கர்-4 (எக்ஸ்ப்ளோரர்-4) ஆகிய செயற்கை கோள்களை குறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரஸாத் கடந்த 17-ஆம் தேதி வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிபர் அஹ்மத் நஜாத் 2019-ஆம் ஆண்டு மனிதனை விண்வெளிக்கு அனுப்பப்போவதாக அறிவித்தார். இதற்கு முன்னோடியாக சோதனை முயற்சியாக குரங்கு அனுப்பப்படுகிறது என கருதப்படுகிறது.
0 கருத்துரைகள் :
Post a Comment