animated gif how to

அரசாங்கம் முஸ்லிம்களை பகடைக்காய்களாக கருதக்கூடாது - ஹக்கீம்

July 06, 2011 |

July 06, 2011.... AL-IHZAN Local News
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் விடுதலை இயக்கமாகும்.மக்கள் பலத்திலேயே இவ்வியக்கம் தங்கியிருக்கின்றது. அரசாங்கத்தின் அங்கமாக இருந்து கொண்டு முஸ்லிம்களினதும் சிறுபான்மையினரினதும் பிரச்சினைகளை அவதானத்தோடும் சாணக்கியமாகவும் அணுகிவருகின்றோம்' 'மென அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புல்மோட்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அவர் அங்கு உரையாற்றுகையில்,

"யுத்தம் முடிந்து வட,கிழக்கும் முழுநாடும் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த சில உள்ளூராட்சித் தேர்தல்கள் இன்னும் சில நாட்களில் நடைபெறப் போகின்றன....
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கில் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனக்குள்ள செல்வாக்கைப் பரீட்சித்துப் பார்க்கப் போகின்றது.ஆனால் கிழக்கு மாகாணத்தில் அதன் வெற்றிக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்பு குச்சவெளி போன்ற பிரதேச சபைகளைப் பொறுத்தவரை நிச்சயமாகத் தேவைப்படுகிறது.
குச்சவெளி பிரதேச சபைப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்தினரிடம் ஆட்சி அதிகாரம் கிட்ட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நல்லுறவைக் கொண்டிருக்கின்றது.

நாம் யாரையும் காட்டிக் கொடுப்பவர்கள் அல்லர்.முன்னர் ஒரு சந்தேகம் நிலவியது.விடுதலைப் புலிகளை படையினருக்குக் காட்டிக் கொடுத்தவர்களாகவும் அவ்வாறே படையினரை புலிகளிடம் காட்டிக் கொடுத்தவர்களாகவும் முஸ்லிம்கள் மீது ஒரு சந்தேகப் பார்வை இருந்தது. இவ்வாறு முஸ்லிம்களின் நிலை அப்பொழுது இருதலைக்கொள்ளி எறும்பு போன்றிருந்திருக்கின்றது. அந்த வீணான சந்தேகம் முற்றாக நீங்கிவிட்டது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகவிருப்பதை புதிய சனத்தொகைக் கணிப்பு எடுத்துக் காட்டும். கிழக்கில் முஸ்லிம்களின் பரம்பல் நாற்பத்தைந்து வீதத்தை தாண்டிவிட்டது. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றோம் என்பதற்காக முஸ்லிம்கள் வெறும் பகடைக்காய்களாக கருதப்படக்கூடாது. ராஜதந்திரத்தோடு காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

காணிகள் அபகரிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. புதைபொருள் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் சிதைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறானவற்றை விவேகமாகவும் இராஜதந்திரமாகவும் கவனமாகவும் அணுக வேண்டும் என்றார். 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!