July 10, 2011.... AL-IHZAN World News
உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா கருதப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கர்களோ தங்கள் நாடு வல்லரசு இல்லை என்று நினைப்பதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் புகழ்பெற்ற வார பத்திரிகையான டைம் இதழ் ஆஸ்பன் கழகத்தோடு இணைந்து அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு கருத்து
கணிப்பை நடத்தியது.
அமெரிக்கா வல்லரசாக தொடர்வதாக கருதவில்லை என்று இந்தக் கருத்து கணிப்பில் பங்கேற்ற 3 அமெரிக்கர்களில் இரண்டு பேர் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க அதிபர்கள் சர்வதேச விவகாரங்களில் மூக்கை நுழைப்பதைக் கைவிட்டு உள்ளூர் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.கணிப்பை நடத்தியது.
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகவும், மற்ற பிரச்சனைகளை விட பொருளாதார சீர்குலைவே ஆபத்தானது என்றும் பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
0 கருத்துரைகள் :
Post a Comment