July 10, 2011.... AL-IHZAN World News
நாடுமுழுவதும் குண்டுகளை வீசிவரும் மேற்கத்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பாவை தாக்குவோம் என லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக நூறு லிபியா நாட்டவர்களை ஆயுதம் அளித்து ஐரோப்பாவிற்கு அனுப்புவேன் என அவர் மிரட்டியுள்ளார்.
திரிபோலியில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் மத்தியில் கத்தாஃபி பேசிய உரை ஒலிப்பரப்பப்பட்டது. அதில் அவர் கூறியதாவது: ஐரோப்பிய மக்கள் உயிர்தியாகம் செய்ய தயாராக இருக்கின்றார்கள். கண்ணிற்கு கண், பல்லிற்கு பல் ஆகிய முறையில் பழிவாங்குவோம். ஆலோசித்து தீர்மானம் எடுக்க அவர்களுக்கு நாம் ஒரு வாய்ப்பை அளிப்போம் என கத்தாஃபி கூறினார்.
திரிபோலியில் பசுமை சதுக்கத்தில் கத்தாஃபிக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். கத்தாஃபியின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு நகரமான ஸப்ஹாவிலும் போராட்டம் நடந்தேறியது.
0 கருத்துரைகள் :
Post a Comment