animated gif how to

ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் நைட்ஸ் டேம்பளர் என்ற கிறிஸ்தவ பயங்கரவாத அமைப்பு

July 28, 2011 |

July 28, 2011.... AL-IHZAN World News
நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில் தூரத்தில் அமைந்துள்ள தீவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்ஆகிய இரண்டுபயங்கரவாத தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்துள்ளனர். இவற்றுக்கு பின்னால் ஐரோப்பாவை இணைக்கும்  கிஸ்தவ வலது சாரி பயங்கரவாதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய Anders Breivik என்ற பயங்கரவாதி ஒரு கடும்போக்கு கிஸ்தவ அடிப்டைகொண்ட வலதுசாரி இரகசிய அமைப்பு ஒன்றை சார்ந்தவன் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன...
Anders Breivik தனது பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த முன்னர் நைட்ஸ் டேம்பளர் என்ற தான் சார்ந்த இரகசிய அமைப்பின் 1500 பக்கங்கள் கொண்ட “2083 – A European Declaration of Independence,”என்ற தலைப்பிலான கொள்கை பிரகடனம் ஒன்றை  பின்லாந்தின் வலது சாரிக் கட்சியின்அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அந்த கொள்கை பிரகடனம் ஒன்பது வருடங்களாக அவனும் அவனின் இயக்கம் உறுபினர்களும் இணைந்து தயாரித்துள்ளனர் என்று நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றது .
அதனை   12 நிமிட வீடியோ பதிவாகவும் அனுப்பியுள்ளான். அதன் மிகவும் சுருக்கமாக வீடியோ ஒன்றும் Youtube பில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்தவீடியோ தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.)ஐரோப்பாவில் இஸ்லாமிய மயமாக்களுக்கும்முஸ்லிம்களுக்கும்மார்க்சியர்களுக்கும் எதிராக புனித சிலுவை போரை ஆரம்பிக்க உருவாக்கப்பட்ட இரகசிய அமைப்பொன்றின் தகவல்களாக அதுவெளிவந்துள்ளன.
கொள்கை பிரகடனத்தில் 2083 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐரோப்பா சர்வவல்லமை கொண்ட வெள்ளையரின் சாம்ராஜ்யமாக தமது பயங்கரவாததாக்கு தல்களின் ஊடாக உருவாக்கப்படும். அதன் முதல் படியாக  ஐரோப்பாவை அழித்து கொண்டிருக்கும் தற்போதைய இடது சாரி சிந்தனை கொண்ட அரசுகள் அழிக்கப்படும். அதன் மூலம்  ஐரோப்பா இஸ்லாமிய பயமாவது தடுக்கப்படும். அதைதொடர்ந்து இஸ்லாத்தின் மீதான சிலுவை போர் ஒன்று பிரகடனமாகும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!