July 27, 2011.... AL-IHZAN Local News
இனி வரும் காலங்களில் முற்கொடுப்பனவு அட்டையினை பயன்படுத்தி பொதுப் போக்குவரத்து சேவையினை இலங்கையில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சு, இது தொடர்பான சாதக பாதக நிலமைகளை தற்போது ஆராய்ந்து வருவதாக அரச தகவல் தினைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பயணிகள் எதிர் நோக்கும் சில்லறை காசு மற்றும் போக்குவரத்து தூரம் - கட்டணம் தொடர்பான வாக்குவாதங்கள் தீர்ந்து போவதுடன் சில்லறை பாக்கிகளையும் சரியான முறையில் பெற்றுக் கொள்வதற்கு வழி பிறக்கும். பயனிகள் போக்குவரத்து யூனியன் மற்றும் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இந்த புதிய திட்டத்தில் ஆர்வமாக உள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் விக்ரர் சமரவீர தெரிவித்துள்ளார்....
இன்னும் இரண்டு ஆண்டுகளிற்குள் இலங்கை முழுவதும் அமுலாக இருக்கும் இந்த புதிய திட்டம் தொடர்பாக, இன்று கொழும்பு மாநாகர சபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுடன் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவும் கலந்து கொள்ளவார்கள்.

0 கருத்துரைகள் :
Post a Comment