July 07, 2011.... AL-IHZAN World News
வெள்ளிக்கிழமை எட்டு லட்சம்பேர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹமா நகரத்தில் சிரியா ராணுவம் 22 பேரை கொலை செய்துள்ளது. ராணுவத்தினரை தடுக்க சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியவர்கள் மீது ராணவம் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியது. 80க்குமேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை இரண்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
அல்ஹுரானி மருத்துவமனையில் ராணுவம் வந்துள்ளதாக எதிர்ப்பாளர்களின் தலைவர்களை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி கூறுகிறது. சமீப நகரங்களான அல்ஸலாமியாவுக்கும், டமாஸ்கஸிற்கும் ஹமாவை சார்ந்தவர்களுக்கும் புலன் பெயர்ந்துள்ளனர். வீடுகளில் தேடுதல் வேட்டையை நடத்திவரும் ராணுவம் ஏராளமானோரை கைது செய்துள்ளது....
அதே வேளையில், எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்கும் அரசின் நடவடிக்கையை ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கண்டித்துள்ளது. மே மாதம் இறுதியில் தல்கலக்கில் எதிர்ப்பாளர்களை கொலை செய்ததும், கைது செய்து சித்திரவதை செய்த நடவடிக்கையும் மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என ஆம்னஸ்டியின் மேற்காசிய துணை இயக்குநர் பிலிப் லூத்தர் தெரிவித்துள்ளார். தல்கலக்கில் நடந்த சம்பவங்களை நேரில் கண்டவர்களிடமிருந்து ஆம்னஸ்டி ஆதாரங்களை சேகரித்துள்ளது.
அங்கு நடந்த பெரும்பாலான அக்கிரமங்களும் சர்வதேச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வரவேண்டியதாகும். சிவிலியன்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் நடந்துள்ளதாக நேற்று ஆம்னஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறது.
சிரியா அரசு பதவியிலிருந்து நீக்கிய ஆளுநரை மீண்டும் நியமித்துள்ளது. ஆயுதக்குழுக்கள் சாலையில் தடை ஏற்படுத்தியதாக அரசு கூறுகிறது. ராணுவத்தின் நடவடிக்கை அரசு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தயாரில்லை என்பதை நிரூபிப்பதாக பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment