July 06, 2011.... AL-IHZAN World News
சூடானிலிருந்து சவூதி அரேபியாவுக்கு அகதிகளுடன் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் மரணித்தனர். சூடானின் கடல் பகுதியான செங்கடலில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. படகில் தீப்பிடித்தபிறகு அது நீரில் மூழ்கியது.படகில் இருந்த 3 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகின் உரிமையாளரான யெமன் நாட்டவரை போலீஸ் கைதுச்செய்துள்ளது. சோமாலியா, சூடான், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்தவர்கள் தாம் படகில் பயணித்தவர்கள்.
247 பேருடன் சென்றுக்கொண்டிருந்த இன்னொரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க அகதிகள் தப்பிச்செல்வதற்கு உபயோகிக்கும் நிரந்தர பாதையில்தான் விபத்து நிகழ்ந்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment