July 01, 2011.... AL-IHZAN Local News
முஸ்லிம் பெயர்களை சூட்டிக் கொண்டவர்கள் மாத்திரம் முஸ்லிம்கள் அல்ல. அல்குர்ஆனையும், அல் ஹதீஸையும் விளங்கி அதன்படி நடப்பவர்களே முஸ்லிம்கள் இவ்வாறு பேராசிரியர் அப்துல்லா (பெரியார் தாசன்) குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் மார்கச் சொற்பொழிவுகளை நடத்திவரும் அவர் மருதானையில் நடைபெற்ற சொற்பொழிவில் மேலும் கூறியிருப்பதாவது,
நான் இணைவைக்காதவனாக இருந்தேன். எனது 16 வயதிலிருந்து இறைவனை தேடுபவனாக இருந்தேன். எனினும் எனக்கு எந்த முஸ்லிம்களும் இஸ்லாம் பற்றி சொல்லித்தரவில்லை. குர்ஆனில் என்ன இருக்கிறது? ஹதீஸில் என்ன இருக்கிறது என்று முஸ்லிம்கள் எவரும் எனக்கு எதையும் சொல்லவில்லை. நானே குர்ஆனைத் தேடி அதில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தேன்...
குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. அது உலக மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனை அனைவரும் படிக்கலாம். புரிந்து கொள்ளலாம். ஆனால் முஸ்லிம்கள் அது தமக்குரியது மாத்திரமே என்று நினைத்து மற்றவர்களுக்கு அதை படிக்கக் கொடுப்பதில்லை. இவ்வாறு இருந்தால் இணைவவைப்பவர்கள் எவ்வாறு இஸ்லாத்தைப்பற்றி அறிய முடியும்? எவ்வாறு இஸ்லர்தை ஏற்றுக்கொள்ள முடியும்?
இறை நம்பிக்கையை ஏற்றுள்ள முஸ்லிம் சமூகும் ஏனைய சமூகங்களுக்கு இன்று துiரோகமிழதை;துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் தஹ்வா பணியில் சரியாக ஈடுபடுவதில்லை. ஏனைய சமூகத்தவர்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ள முஸ்லிம்கள் உதவுவதில்லை.
எனவே முஸ்லிம்கள் அல்குர்ஆன் என்ன நோக்கத்திற்காக அருளப்பட்டது, யாருக்காக அருளப்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வெறுமனே முஸ்லிம் பெயர்களை சூட்டிக் கொண்டவர்கள் மாத்திரம் முஸ்லிம்கள் அல்ல. அல்குர்ஆனையும், அல் ஹதீஸையும் விளங்கி அதன்படி நடப்பவர்களே முஸ்லிம்கள் என்வும் சுட்டிக்காட்டினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment