animated gif how to

சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!

July 01, 2011 |

July 01, 2011.... AL-IHZAN World News
சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.


அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று கடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில் இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானிய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.


"பண்பாடற்ற ஸியோனிஸ சக்திகள் தம்முடைய குறுகிய நோக்கங்களின் பொருட்டு முழு மனித குலத்தையும் தங்களுடைய சுயநல சடவாத, பொருள் முதல்வாத சித்தாந்தங்கள் எனும் இரும்புச் சக்கரங்களின் கீழிட்டு காலங்காலமாக நசுக்கிவருகின்றன" என்று அஹ்மதி நிஜாத் சாடியுள்ளார்.....
"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் பலஸ்தீன் நிலங்கள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளமை, அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய மற்றும் ஈராக்கிய யுத்தங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை என்பன போன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்குச் சகாவான இஸ்ரேலும் ஒன்றிணைந்து தம்முடைய காலனித்துவ அடைவுகளுக்காக முழு மனித விழுமியங்களையும் பலிகொடுக்கத் தயாராக உள்ளமையைத் தான் நிரூபித்துள்ளன" என்று ஈரானிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.


"இன்று உலகில் ஒரு குற்றச்செயல், ஊழல், சர்வாதிகாரம் என மனித இனத்தை இழிவுபடுத்தும் எந்த ஒன்றையேனும் கடந்துபோக நேர்கையில், அதன் பின்னணியில் ஸியோனிஸ இராச்சியமும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அவர்கள் எதனைக் காவு கொடுத்தேனும் தம்முடைய சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதில்தான் மும்முரமாக உள்ளனர். அதைத் தவிர, வேறு எதைப் பற்றியும் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை" என்றும் ஈரானிய அதிபர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!