தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தாலிபான் மற்றும் அல்-காயிதாவினரைப் பிடிக்கப் போவதாகச் சொல்லி, அமெரிக்கா பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து கூட்டுப் பயிற்சி செய்துவருகிறது.
சமீபத்திய பின்லாடன் வேட்டைக்குப்பிறகு பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவில் மாற்றம் அடைந்துள்ளது. இஸ்லாமாபாத்துக்கு தென்மேற்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் பாக். விமானத் தளம் உள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த தளத்தை, தனது உளவுப் பணி மற்றும் ரகசிய ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் அல்காய்தா தலைவர் பின்லேடன்...
கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், அமெரிக்காவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருவதைத் தொடர்ந்து, விமானப் படைத்தளத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்காவை பாகிஸ்தான் நிர்பந்தித்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அகமது முக்தர் இஸ்லாமாபாத்தில்இத்தகவலை தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :
Post a Comment