July 06, 2011.... AL-IHZAN Local News
உலக புதிய கண்டுபிடிப்புகள் சுட்டியில் சுவிஸ்லாந்து முன்னணியில் உள்ளது. சுவீடன் இரண்டாவது இடத்திலும் சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலகளாவிய ரீதியில் 125 நாடுகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நாடுகளின் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆற்றல்கள், பெறுபேறுகள் மற்றும் அதிகளவான கண்டுபிடிப்புகளில் ஈட்டிய வெற்றிகள், பலவீனங்கள், திறமையான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தமது கண்டுபிடிப்பு ஆற்றலை நிறைவேற்றுவதற்கு குறைபாடுகளைக் கொண்டோர் போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன...இன்செட் தயாரித்த இந்த அறிக்கையில் அல்கார் டெல் லு சென் கம்பனி, இந்திய கம்பனி கைத்தொழில் துறை, உலக புலைமைசார் சொத்துடைமை அமைப்பு என்பன இணைந்து கொண்டுள்ளன. "இன்று முழுஉலகுமே புதிய கண்டுபிடிப்புகள் பற்றி கதைக்கின்றது. கைத்தொழில் துறை, அரசாங்கம், சமூகம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் பற்றி பேசுகின்றது' என்று போக்ஸ் மார்ச்சலின் பணிப்பாளரும், உலக கண்டுபிடிப்புகள் சுட்டி பேரவையின் தலைவருமான நவுசாட் போக்ஸ் கூறியுள்ளார்.
புதிய கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் தொடர்பான விடயங்களில் இலங்கை உலகில் 82 ஆவது இடத்தில் உள்ளது. இதற்கான பட்டியலை இன்செட் என்ற சர்வதேச வர்த்தகக் கல்லூரி தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை இந்தியாவுக்குப் பின்னால் உள்ள போதிலும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் பார்க்க முன்னணியில் காணப்படுகிறது.
உலக புதிய கண்டுபிடிப்புகள் சுட்டியில் சுவிஸ்லாந்து முன்னணியில் உள்ளது. சுவீடன் இரண்டாவது இடத்திலும் சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலகளாவிய ரீதியில் 125 நாடுகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நாடுகளின் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆற்றல்கள், பெறுபேறுகள் மற்றும் அதிகளவான கண்டுபிடிப்புகளில் ஈட்டிய வெற்றிகள், பலவீனங்கள், திறமையான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தமது கண்டுபிடிப்பு ஆற்றலை நிறைவேற்றுவதற்கு குறைபாடுகளைக் கொண்டோர் போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன...இன்செட் தயாரித்த இந்த அறிக்கையில் அல்கார் டெல் லு சென் கம்பனி, இந்திய கம்பனி கைத்தொழில் துறை, உலக புலைமைசார் சொத்துடைமை அமைப்பு என்பன இணைந்து கொண்டுள்ளன. "இன்று முழுஉலகுமே புதிய கண்டுபிடிப்புகள் பற்றி கதைக்கின்றது. கைத்தொழில் துறை, அரசாங்கம், சமூகம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் பற்றி பேசுகின்றது' என்று போக்ஸ் மார்ச்சலின் பணிப்பாளரும், உலக கண்டுபிடிப்புகள் சுட்டி பேரவையின் தலைவருமான நவுசாட் போக்ஸ் கூறியுள்ளார்.
News: Yarlmuslim
0 கருத்துரைகள் :
Post a Comment