July 06, 2011.... AL-IHZAN Local News
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சிநெறியை பூர்த்திசெய்த 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கொண்ட இரண்டாவது தொகுதி மாணவர்கள் இன்று புதன்கிழமை வெளியேறுகின்றனர். நாடளாவிய ரீதியிலுள்ள 28 பயிற்சி முகாம்களிலிருந்து இவர்கள் இன்று வெளியேறுகின்றனர் என்று உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டொக்டர்.சுனில் நவரட்ண தெரிவித்தார்.
மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதில் 780 மாணவர்கள் தலைமைத்துவப் பயிற்சி பெறவுள்ளனர். ரந்தம்பே மாணவர் படை பயிற்சிப் பாசறையில் நடைபெறவிருக்கும் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் 600ற்கும் அதிகமானவர்கள் தமிழ்மொழி மூலமான மாணவர்கள் என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்(படங்கள் இணைப்பு)....
அதேநேரம், பல்கலைக்கழகங்களில் பதிவுகளை மேற்கொள்வதற்கான காலஎல்லை இம்மாத இறுதியுடன் முடிவடைவதால் மூன்றாவது தொகுதியில் பயிற்சி பெறும் மாணவர்களின் பல்கலைக்கழகப் பதிவுகள் அவர்களின் பயிற்சிப் பாசறையிலேயே மேற்கொள்ளப்படும். 3வது தொகுதியில் தலைமைத்துவப் பயிற்சிகளைப் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமிருக்காது என்றும் அமைச்சின் செயலாளர் சுனில் நவரட்ண குறிப்பிட்டார்.
இதேவேளை, 2வது தொகுதியில் ரந்தம்பே பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற 982 மாணவர்கள் வெளியேறுகின்றனர். இவர்களில் 24 பேர் சிங்களமொழி மூலமான மாணவர்கள் எஞ்சியவர்கள் தமிழ்மொழி மூலமான தமிழ் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள்.
ரந்தெனிகல பயிற்சி முகாமில் இடம்பெறும் தலைமைத்துவபயிற்சி சம்பந்தமாக எமது அல்-இஹ்ஸான் இணையதளத்துக்கு கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள்

0 கருத்துரைகள் :
Post a Comment