July 07, 2011.... AL-IHZAN Local News
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் இணையத்தள அங்குரார்ப்பண வைபவம்06.07.2011 புதன் கிழமையன்று கொழும்பு அஞசல் தலைமையகக் கேட்போர் கூடத்தில் மீள்பார்வை ஊடக மையம் மற்றும் அதன் இலத்திரனியல் ஊடகப் பிரிவான E Media ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏற்புரை நிகழ்த்திய கலாநிதி சுக்ரி அவர்கள் “அல்லா ஹ் சில மனிதர்களுக்கு சில ஆற்றல்களை, இயலுமைகளை வழங்குகிறான். இவ்வாறு அல்லாஹ்வால் வழங்கப்படுவது அவனது அருளாகும். அதன் மூலம் அவர்கள் சமூகத்திற்கு பங்களிப்புக்களை நல்குவது இன்றியமையாததாகும்” எனக் குறிப்பிட்டார்..
அவர் மேலும் குறிப்பிடும் போது, “கடந்த காலங்களில் எனது பேச்சுக்களையும் எழுத்துக்களையும், ஆவணப்படுத்தாமை மிகப்பெரும்;குறையென்று கருதுகிறேன்....
.இன்று மேற்கொள்ளப்படும்; இந்த முயற்சி அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் என நம்புகிறேன். மேலும், இந்த இணையத்தளத்தை உருவாக்க எனது மாணவர்களும் நலன் விரும்பிகளும் எடுத்த முயற்சியையிட்டு சந்தோஷமடைகிறேன். தாம் கல்வி கற்ற கலாபீடத்துக்கும் தமக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் செய்யும் நன்றியாகவே இதனைக் கருதுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
வாமி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதியரசர் சட்டத்தரணி சலீம் மர்ஸ_ப், கலாநிதி சுக்ரி அவர்களது இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். மேலும், ஜாமிஆ நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
கலநிதி சுக்ரி அவர்களின் இணையத்தளத்தை www.drshukri.net எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
News: meelparvai
0 கருத்துரைகள் :
Post a Comment