animated gif how to

இலங்கையின் கடற்பரப்பில் உலகில் மிகவும் அரிதான நீல நிர திமிங்கிலங்கள்

June 06, 2011 |

June 06, 2011.... AL-IHZAN Local News

இலங்கையின் கடற்பரப்பில் உலகில் மிகவும் அரிதான நீல நிர திமிங்கிலங்கள் – Blue Whales – கண்டுபிடிகபட்டுள்ளது இலங்கையின் கடற்பரப்பில் காணப்படும் நீல நிர திமிங்கிலங்கள் மிகவும் பாரியது என்றும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படாத பெரிய பருமனில் காணப்டுகின்றது என்று கடல் உயிரியல் ஆய்வாளர்கள்- marine biologist- தெரிவித்துள்ளனர்.
கடந்த முப்பது வருட யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில்  இலங்கையின் கடல் பற்றிய அற்புதமான தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது திருகோணமலை , புத்தளம் கற்பிட்டி மற்றும் அழுத்கம, அம்பலாங்கொட ஹிக்கடுவ, காலி ஆகிய பிரதேச கடல் பகுதியில் இவை அதிகமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.Video..........

இதேவேளை திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான பயணிகள் கப்பல் சேவை ஒன்று இன்று இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை துறைமுக அஸ்ரப் இறங்கு துறையில் இருந்து இந்த கப்பல் தொடங்கிவைக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்பயணிகள் கப்பல் 3 தொடக்கம் 6 மணித்தியாலங்கள் சேவையில் ஈடுபடுவதுடன் இது ஒரே நேரத்தில் 100 பயணிகளை ஏற்றக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களுக்காக வாரத்திற்கு 3நாட்கள் இயங்கும்.
கடந்த ஜனவரி மாதம் காலியில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கானஆரம்பிக்கப்பட்ட இக்கப்பல் சேவை தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான காலமான மே மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை இயங்கும் என தெரியவருகிறது. இந்த கப்பல் சேவை ஏனைய குறிபிட்ட பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!