June 07, 2011.... AL-IHZAN Local News
நேற்று கொழும்பு ராஜகிரியாவில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சகல கொடுப்பனவுகளுடன் கூடிய நாளாந்த சம்பளம் ரூபா 515 ஆக அதிகரிப்பது தொடர்பில் தோட்டத் தொழிலாளர் சங்கமும் தோட்டத் துரைமார் சங்கமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, தோட்டத் தொழிலாளருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இச் சம்பள உயர்வை நடைமுறைப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கால வரையறை இரண்டு வருடங்களாகும். இதன்படி, தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த அடிப்படைக் கொடுப்பனவு 380 ரூபாவாகவும், ஏனைய கொடுப்பனவுகளோடு மொத்த சம்பளம் 515 ரூபாவாகவும் அமையும். இதற்கு முன்னர் தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 285 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது..........
மேலும், இப் புதிய ஒப்பந்தத்தில் தொழிலாளி ஒருவர் மேலதிகமாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோ கொழுந்துக்கும் ரூபா 17 வீதம் கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது சுமார் 15 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசிக்கு மத்தியில் இந்தச் சம்பள உயர்வு, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும் என நம்பப்படுகின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment