June 12, 2011.... AL-IHZAN Local News
ஜனாதிபதிக்கு கடிதம்: மாத்தறை மாவட்டத்தில் ஹக்மன தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரே முஸ்லிம் கிராமமான மீயெல்ல முஸ்லிம்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மை இன வாலிபர்கள் சிலரின் அடாவடித்தனங்களுக்கு தொடராக இலக்காகி வருகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் அடாவடித்தனம் காரணமாக இரண்டு முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் , பெண்கள், பாடசாலை மாணவர்கள் என இக்கிராம மக்கள் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் . இந்த விடையம் தொடர்பாக மீயெல்ல கிராம முஹீதீன் ஜும்மாஹ் மஸ்ஜித் நிர்வாகம் தமது ஊர் முஸ்லிகளுக்கு பெரும்பான்மை வாலிபர்கள் சிலரினால் இழைக்கப்பட்டு வரும் துன்புறுத்தல்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்....
ஜனாதிபதி இந்த விடையத்தில் தலையிட்டு மீயெல்ல கிராம முஸ்லிம்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழும் வகையில் அமைதியான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தி தருமாறு அந்த கடிதத்தில் மஸ்ஜித் நிர்வாகம் வேண்டியுள்ளது
மீயெல்ல முஸ்லிம் கிராமத்தில் சுமாராக 380 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலான முறையில் பெரும்பான்மையின சிங்கள வாலிபர்கள் சிலர் திட்டமிட்ட அடிப்படையில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் தொழுகை முடிந்து வீடுகளுக்கு வருவோரின் தொப்பிகளை கழற்றி செல்லல் வீதியில் நடமாடுபவர்கள் மீது, சைக்கில் செயின் மற்றும் ஹெல்மெட்டினால் தாக்குதல் நடத்துதல் பாடசாலைக்கு பிஸ்ஸில் செல்லும் முஸ்லிம் மாணவ மாணவியர் மீது துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் முஸ்லிம் கடைகளில் சாமான்களை வாங்கிய பின்னர் பணம் கொடுக்காமல் மிரட்டிவிட்டு செல்லல் முஸ்லிம் பெண்கள் , சிறுவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டுதல் போன்றவை இடம்பெறுவதாக ஜனாதிபதிக்கு அனுபிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
News: Lankamuslim
News: Lankamuslim
1 கருத்துரைகள் :
உடனடியாக முஸ்லிம் தலைவர்கள் இந்தவிடயத்தில்
அரசியல் பேதம் பார்க்காமல் களத்தில் இறங்கவேண்டும்
இல்லாவிட்டால் ஒவ்வொரு முஸ்லிமும் இறங்கிபோராடவேண்டும்.
Post a Comment