June 27, 2011.... AL-IHZAN World News
அமெரிக்காவே பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாக ஈரானின் உயர்மட்டத் தலைவர் அப்துல்லா அலி கமெனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் விமானத்தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்படுவதை சுட்டிக்காட்டியே கமெனி இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இவ்வாறான உயிரிழப்புகளுக்குப் பொறுப்பான இராணுவத்தைக் கொண்ட ஒரு நாடு பயங்கரவாதத்திற்கெதிரான போர் தொடர்பில் உலகுக்கு அறிவுரை வழங்க முடியாதெனக் கமெனி குறிப்பிட்டுள்ளார்......
அமெரிக்காவுக்கு எதிரான இவ்வாறான கருத்துகள் ஈரான் தலைமைத்துவத்திடமிருந்து வருவது வழமையானது ஆனால் கமெனியின் இக்கருத்து யார் பயங்கரவாதிகள் யார் சுதந்திரத்திற்கான போராளிகள் என்பதில் ஈரான் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பிளவின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தமது மன்னனின் விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீனப் போராளிக் குழுக்களை அமெரிக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் பயங்கரவாதிகளென வர்ணிப்பதாகவும் கமெனி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தெஹ்ரானில் ஆரம்பமான பயங்கரவாத எதிர்ப்பு குறித்து சர்வதேச மாநாட்டுக்காக விடுத்துள்ள செய்தியிலேயே கமெனி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RSS Feed
June 27, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment