June 27, 2011.... AL-IHZAN Local News
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 50 வது வருடாந்தச் செயலமர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை கொழும்பு சினமன் லேக்சயிட் ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 47 உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 200 பேராளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பார்வையாளர் அந்தஸ்தில் பங்குபற்றவுள்ளன. இலங்கையின் நீதியமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இதனைக் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.
இவ்வமைப்பின் தலைவராகப் பணியாற்றிய தன்சானியாவைச் சேர்ந்த அந்நாட்டின் அரசியலமைப்பு, சட்டத்துறை அமைச்சர் செலினா கொம்பானி தலைமைப் பொறுப்பை இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

RSS Feed
June 27, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment