animated gif how to

இந்தியாவில் அணுவிபத்து ஏற்பட்டால் இலங்கைக்கு பேராபத்து

June 27, 2011 |

June 27, 2011.... AL-IHZAN Local News
இந்தியாவிலுள்ள அணுசக்தி உலைகளில் ஏதாவது விபத்து இடம்பெற்று அதன் மூலம் கதிர்வீச்சு ஏற்படுமானால் அந்த விடயத்தைக் கையாளுவதற்காக அமைப்பொன்றை இலங்கை உருவாக்கவுள்ளது.

தென்னிந்தியாவிலுள்ள அணுசக்தி நிலையங்களுக்கு மிக சமீபமாக இலங்கை இருக்கின்றது. அதனால் சர்வதேச அணுசக்தி முகவரமைப்பின் ஆலோசனைக்கமைய சுயாதீனமான ஒழுங்கமைப்புப் பிரிவை இலங்கை ஸ்தாபிப்பது தேவையானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

மிக ஒடுங்கிய நீர்ப்பரப்பான பாக்குநீரிணையினால் இலங்கையும் இந்தியாவும் பிரிக்கப்பட்டுள்ளன....

அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற அணுக்கசிவு அனர்த்தமானது இலங்கையை விழிப்புடன் இருப்பதற்கான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் அத்தகைய அனர்த்தம் சம்பவித்தால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற நிலைமை இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள அணுசக்தி சட்டத்தை அகற்றிவிட்டு புதிய அணுசக்தி தொழில்நுட்பச் சட்டமூலம் பேரவையை அமைக்கும் ஏற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!