animated gif how to

சம்மாந்துறையில் இடமாற்றத்தை இரத்து செய்ய வேண்டி அதிகாரிகள் பொதுமக்களாள் சுற்றிவளைப்பு

June 15, 2011 |

June 15, 2011.... AL-IHZAN Local News
சம்மாந்துறை பிரதேசத்தில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர், பிரதேசசபை தவிசாளர் ஆகியோரை பிரதேச செயலகத்தை விட்டு வெளியேறாமல் பொதுமக்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி பொதுமக்கள் இரவு 10 மணிவரையும் குறித்த அதிகாரிகளை பிரதேச செயலகத்தில் தடுத்து வைத்து, இடமாற்றம் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக வழங்கப்பட்ட வாக்குறிதியையடுத்து விடுவிக்கப்பட்டள்ளனர்....

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சமமின்மையை நீக்கும் நோக்கில் ஆசிரியர் இடமாற்றம் நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ் இடமாற்றம் தொடர்பாக சம்மாந்தறை கல்வி வலயத்தில் மாணவர்களும் பெற்றோரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நவுஷாட் தலைமையில் பிரதேச செயலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் இடம்பெற்றது...
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்விபணிப்பாளார் எம்.ரி.ஏ.நிஸாம், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.கே.மன்சூர், பிரதேசசபை உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர் அமீர் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வி அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தையடுத்து கூட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டதுடன் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளார் எம்.ரி.ஏ.நிஸாம், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.கே.மன்சூர், பிரதேச சபை தவிசாளர் நவுஷாட் ஆகியோரை பொதுமக்கள் ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரியும் வலயக் கல்விபணிப்பாளரை மாற்றக் கோரியும் தடுத்து வைத்தனர்.

இவர்களை மீட்பதற்கு சமரசமுயற்சில் பொலிஸ் அத்தியட்சகர் ஈடுபட்டபோதும் பயனளிக்கவில்லை. இச்சம்பவ இடத்திற்கு காரைதீவு விசேட அதிரடிப் படையினர் வரவளைக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கிழக்குமாகாண ஆளுநர் மற்றும் மாகாண அமைச்சின் அறிவுரைக்கமைய வலயக்கல்வி ஆசிரியர் இடமாற்றம் குளறுபடி காரணமாக மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது என வாக்குறுதியளித்ததுடன் இதனை பள்ளிவாசல்கள் ஒலிபெருக்கியில் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தடுத்துவைக்கப்பட்டவர்கள் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.




0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!