June 15, 2011.... AL-IHZAN Local News
சவூதி அரேபியாவில் மரணமான குழந்தையின் பெற்றோர்களில் ஒருவர் இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானாவிற்கு மன்னிப்பை வழங்கியுள்ளார். ஆனாலும் அக் குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் மன்னித்தால் மட்டுமே ரிஸானாவை விடுவிக்க முடியுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்கள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைப் பணிப் பெண்ணான ரிஸானா சவூதியில் குழந்தையொன்றை கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்....
இவரது மரண தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அவரது எதிர்காலமானது அக் குழந்தையின் பெற்றோர்களின் கையிலே தங்கியுள்ளது.
நாங்கள் ரிஸானாவின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். அவரது விடுதலைக்கு ஈடாக பணம் கோரப்படுமாயின் அதை கொடுக்கவும் அரசு தயாராகவுள்ளது
நாங்கள் ரிஸானாவின் குடும்பத்துக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம். இருப்பினும் அவர்கள் ரிஸானா தாயகம் திரும்பவேண்டும் என்பதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2 கருத்துரைகள் :
alhamdu lillaah
masha allah allah bless our family members please all muslims pray for me
Post a Comment