animated gif how to

கையடக்க தொலைபேசி கட்டணம் குறைகிறது

June 26, 2011 |

June 26, 2011.... AL-IHZAN Local News
கையடக்கத் தொலைபேசிக்கான ஆகக் குறைந்த கட்டணத்தை மேலும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி தற்போதுள்ள கையடக்க தொலைபேசிக்காக தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணமானது 2 ரூபா எனவும் எதிர்வரும் மாதம் முதல் நிமிடம் ஒன்றுக்கு ஒரு ரூபா 50 சதம் (1.50) வரை குறைக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிரந்தர தொலைபேசி இணைப்புக்களுக்கு சமாந்திரமாக கையடக்க தொலைபேசி இணைப்புக்களிலும் பாரிய வளர்ச்சியொன்றைக் காணக்கூடியதாக உள்ளது எனவும் நாட்டில் தற்போது தொலைபேசி பாவனையானது 20 மில்லியனுக்கும் 17 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் காணப்படுவது டன் அதில் அதிகமானவை கையடக்கத் தொலைபேசி பாவனை என பணிப்பாளர் நாய கம் அனூஷ பெல்பிட்ட மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!