animated gif how to

இலங்கை வந்துள்ள பேராசிரியர் அப்துல்லாஹ் பல இடங்களில் உரையாற்றவுள்ளார்

June 24, 2011 |

June 24, 2011.... AL-IHZAN Local News
மஸ்ஜித் தௌஹீத் ஸ்ரீலங்கா'அமைப்பின் அழைப்பினையேற்று நேற்று இலங்கைக்கு  வருகை தந்த பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) இன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மார்க்க சொற்பொழிவுகளை  நடத்தவுள்ளார்.
நாளை 25 ஆம் திகதி கெக்கிராவையில்  பிற்பகல் 4 மணிக்கு `இஸ்லாமிய குடும்ப வாழ்வு'  என்ற தலைப்பிலும் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வவுனியா நகர சபை மண்டபத்தில் `நிம்மதிக்காக ஒரே வழி ஆன்மிகம்' என்ற தலைப்பிலும் உரையாற்றுவார்.

27 ஆம் திகதி கொழும்பு எல்பின்ஸ்டன் திரை அரங்கில் பிற்பகல் 5 மணிக்கு `நாத்திகத்திலிந்து ஆத்திகத்திற்கு'  என்ற தலைப்பிலும் 29 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பேருவளை  சீனன்கோட்டையில் `மனித குல மாணிக்கம் முஹம்மத் (ஸல்)' என்ற தலைப்பிலும்......

30 ஆம் திகதி காலை 9 மணிக்கு  தெஹிவளையில்  பெண்கள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு `கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்' என்ற தலைப்பில்  உரையாற்றும் அதேவேளை,  பிற்பகல் 6.30 மணிக்கு இளைஞர் நிகழ்ச்சியொன்றில்  கலந்து கொண்டு `இளைஞர்களுக்கான  நாளை'  என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்துவார்.
மேலும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி பிற்பகல் 7 மணிக்கு திஹாரிய ஜாமிஉத் தவ்ஹீதில்  `அல்குர்ஆன் ஒரு வாழ்வியல் அற்புதம்'  என்ற தலைப்பிலும் 2 ஆம் திகதி பிற்பகல் 7 மணிக்கு  கொழும்பு புதுக்கடையில் `என்னைக் கவர்ந்த இஸ்லாம்'  என்ற தலைப்பிலும் 3 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெலிகமவில்  `கடவுளின் பெயரால்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தவுள்ளார்.
பெரியார்தாசன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மா என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர். இவர் 12-3-2010 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.
தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  அவர் தெரிவித்தார்.
“நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது” என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!