June 22, 2011.... AL-IHZAN Local News
இனிமேலாவது இருட்டறைகளுக்குள்ளிருந்து எமது முஸ்லிம் சமூகம் வெளியே வரவேண்டும். இன்று ஆரம்பிக்கப்படும் அறிவுப் பெட்டகம் ஊடக நிறுவனத்தை முஸ்லிம் சமூக விடியலின் ஆரம்பமாக கொள்ளவேண்டும்.
முஸ்லிம்கள் குறித்த மேற்குலகின் தவறான செயற்பாடுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு முஸ்லிம்களுக்கு உள்ளபோதும் அதனைச் செய்யக்கூடிய தளமொன்று இன்றுவரை முஸ்லிம்களிடம் இல்லாமலிருப்பதாக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் அறிவுப் பெட்டகம் என்ற ஊடக நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் அதீதிகளுல் ஒருவராக கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அமீன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய அரசாங்க தூதுக்குழு முஸ்லிம் கட்சிகளையோ அல்லது அரசியல் தலைவர்களையோ கண்டுகொள்ளவேயில்லை. இதையிட்டு முஸ்லிம்கள் அதிருப்தியடைந்த போதிலும் உடனடியாக மக்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிட்டவில்லை. அதனை முஸ்லிம் சமூகத்திடம் கொண்டுசெல்ல ஒருவாரம்வரை காத்திருக்கவேண்டிய பரிதாப நிலையேற்பட்டது. பஸ் சென்றதன் பின்னர் கைகாட்டும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்...
வசதி படைத்தவர்கள் எமது சமூகத்தில் காணப்பட்டாலும் தனியான ஊடகத்தை ஏற்படுத்துவதில் இவர்கள் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. நீண்டகாலமாக இதன் தேவையை நாம் வலியுறுத்தி வருகிறோம். அவை அவர்களின் காதுகளுக்கு எட்டியதாகக் காணப்படவில்லை.கொழும்பில் அறிவுப் பெட்டகம் என்ற ஊடக நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் அதீதிகளுல் ஒருவராக கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அமீன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய அரசாங்க தூதுக்குழு முஸ்லிம் கட்சிகளையோ அல்லது அரசியல் தலைவர்களையோ கண்டுகொள்ளவேயில்லை. இதையிட்டு முஸ்லிம்கள் அதிருப்தியடைந்த போதிலும் உடனடியாக மக்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிட்டவில்லை. அதனை முஸ்லிம் சமூகத்திடம் கொண்டுசெல்ல ஒருவாரம்வரை காத்திருக்கவேண்டிய பரிதாப நிலையேற்பட்டது. பஸ் சென்றதன் பின்னர் கைகாட்டும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்...
இனிமேலாவது இருட்டறைகளுக்குள்ளிருந்து எமது முஸ்லிம் சமூகம் வெளியே வரவேண்டும். இன்று ஆரம்பிக்கப்படும் அறிவுப் பெட்டகம் ஊடக நிறுவனத்தை முஸ்லிம் சமூக விடியலின் ஆரம்பமாக கொள்ளவேண்டும்.
RSS Feed
June 22, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment