June 22, 2011.... AL-IHZAN Local News
எதிர்வரும் ஜுலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜுலை மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த வாக்காளர்களுக்கான வாக்குச்சீட்டுகளை தபாலிடும் வேலைகள் ஜுலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்தல் உதவி தெரிவத்தாட்சி அதிகாரி நாலக ரத்னாயக தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரமே நடைபெறவுள்ள உள்ளராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும். அத்துடன் தேசிய அடையாள அட்டையில்லாதவர்கள் தற்காலிக அடையாள அட்டைகளை ஜுலை மாதம் 13 ஆம் திகதிக்கு முன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
RSS Feed
June 22, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment