animated gif how to

சவூதி அரேபிய மன்னர் திருந்துகிறார்..?

June 10, 2011 |

June 10, 2011.... AL-IHZAN World News
துனிசியா மற்றும் எகிப்து நாடுகளில் உருவானது போல, சவுதி அரேபியாவிலும் புரட்சி உருவாகாமல் தடுக்க அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பல்வேறு சலுகைகளை அந்நாட்டு மன்னர் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதற்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: துனிசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இது போன்ற சூழ்நிலை தங்கள் நாட்டில் உருவாகி விடக்கூடாது என்பதில், சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தினர் உஷாராக உள்ளனர். அதனால், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டு மாதச் சம்பளம் கூடுதலாக வழங்க, சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.....

மேலும், குறைவான வருவாய் பிரிவினருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக, 3 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். மத ரீதியான போலீஸ் உட்பட மத நிறுவனங்களுக்காக 900 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. மத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை சவுதி அரேபிய அரசு கொண்டுள்ளது. அதுவும் மன்னர் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க பெரிதும் துணை புரிகிறது. மொத்தத்தில் ஆறு லட்சம் கோடி ரூபாயை செலவிட, மன்னர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மன்னர் அப்துல்லாவின் தம்பியும், இளவரசருமான தலால் பின் அப்துல் அசீஸ் கூறுகையில், ""மன்னர் தன் அதிகாரத்தையும், பணத்தையும், கவுரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார். தற்போதைய நிலைமை நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். மாற்றம் என்ற வார்த்தையைக் கண்டு பயப்படுகிறார். அதனால், பல சலுகைகளை அறிவித்துள்ளார். குறுகிய கண்ணோட்டம் கொண்ட அவர்களை எப்படி மாற்றுவது என்பது எனக்குத் தெரியவில்லை,'' எனக் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே சவுதி மக்கள் மனதில் எழும் அதிருப்திக்கு விடையாக, மன்னரின் தாராள சலுகைத் திட்டங்கள் தற்போது வெளிப்படையாக வந்துள்ளன.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!