June 11, 2011.... AL-IHZAN Local News
துருக்கி அரசாங்கத்தில் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2011/2012 கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை உயர் கல்வியமைச்சு கோரியுள்ளது.
மருத்துவ விஞ்ஞானம் தவிர்ந்த வேறெந்தத் துறைக்கும் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க முடியுமெனவும் உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலதிக விபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் www.mohe.gov.lkஎன்ற இணையத்தளம் மூலம் பெறமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011/2012 ஆம் கல்வியாண்டுக்காக ஐந்து புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
RSS Feed
June 11, 2011
|



0 கருத்துரைகள் :
Post a Comment