June 07, 2011.... AL-IHZAN World News
ஏமனில் 33 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் அலி அப்துல்லாவுக்கு எதிராக நீடிக்கும் கிளர்ச்சியின் ஒரு அங்கமாக, அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அவருக்கு தலை, மார்பு, கழுத்து பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.
ரியாத் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது,
மார்பில் பாய்ந்திருந்த வெடிகுண்டு சிதறல்களை டாக்டர்கள் அகற்றினார்கள். இதற்கிடையே, ஏமனை விட்டு அலி அப்துல்லா வெளியேறி விட்டதால் புரட்சியில் ஈடுபட்ட மக்கள் வீதிகளில் இறங்கி ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எனினும், மீண்டும் ஏமனுக்கு அலி அப்துல்லா திரும்புவாரா? அல்லது அரேபியா தலையிட்டு அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்துமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.மார்பில் பாய்ந்திருந்த வெடிகுண்டு சிதறல்களை டாக்டர்கள் அகற்றினார்கள். இதற்கிடையே, ஏமனை விட்டு அலி அப்துல்லா வெளியேறி விட்டதால் புரட்சியில் ஈடுபட்ட மக்கள் வீதிகளில் இறங்கி ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
RSS Feed
June 07, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment