கட்டாரில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவரை அவருடன் பணி புரிந்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான அரீப் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரீப் தங்கியிருக்கம் இடத்துக்கு சென்ற குறித்த இலங்கையர் அரீப் கதவை திறந்ததும் கொடூரமாக குத்திவிட்டு தப்பிசென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அரீப் கத்தியால் குத்தப்படுவதை நேரில் பார்த்த அவரது சகோதரர் ஹமீட், அரீப்பை வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றபோதும் அவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிர்நீத்துள்ளார்....
அரீப்பின் சகோதரரான ஹமீட் கடந்த நான்கு வருடங்களாக கட்டாரில் சாரதியாக கடமையாற்றி வருவதுடன் இவரும் கட்டாரில் அரீபுடனே தங்கி வந்துள்ளார். ஜூலை மாதம் நாடு திரும்ப இருந்த அரீப்புக்கு அவரது குடும்பத்தார் திருமண ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் குறித்த இலங்கை நபர் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பில் கட்டார் அதிகாரிகள் தகவல் ஏதும் வெளியிடவில்லை
0 கருத்துரைகள் :
Post a Comment