animated gif how to

இஸ்ரேல் மீண்டும் வெறியாட்டம் - 20 பேர் வபாத்தாகினர், 220 பேர் காயம்

June 07, 2011 |

June 07, 2011.... AL-IHZAN World News

சிரியா - இஸ்ரேல் எல்லையான கோலன் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் மேற்பட்ட பலஸ்தீன ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 220 பேர் அளவில் காயமடைந்தனர்.

கோலன் ஹைட்ஸ் பகுதியை 1967 ஆம் ஆண்டு சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்த ‘நக்சா தினம்’ நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி சிரியர்கள் மற்றும் அங்குள்ள பலஸ்தீன அகதிகள் இஸ்ரேல் எல்லையில் ஒன்றுதிரண்டு பலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பியதோடு எல்லையோர பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கல்வீச்சும் நடத்தினர்.......
இந் நிலையில் இஸ்ரேல் இராணுவம் அங்கு குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர் களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எல்லையை மீறி வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் கொல்லப்படுவீர்கள் என்றும் அரபி மொழியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தது. எனினும் அந்த எச்சரிக்கை யையும் மீறி இஸ்ரேல் எல்லையை கடக்க முயன்றதால் இஸ்ரேல் இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட் டுள்ளது. 

சிரியாவில் 13 முகாம்களில் சுமார் 5 இலட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே கடந்த மாதம் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதன் 63 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கலவரங்களில் 12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க: BBC  செய்தியையும் கேட்டு பாருங்கள்  

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!