June 20, 2011.... AL-IHZAN Local News
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் மூன்று வார காலத்திற்குள் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென தேசிய கல்வியியல் கல்லூரி ஆணையாளர் திஸ்ஸஹேவா வித்தாரண தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கல்வியியல் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும். இம் முறை 3200 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள அதே வேளை இதில் ஆரம்ப பிரிவு ஆசிரியர் பயிற்சி நெறிக்கே கூடுதலான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க திட்டமித்துள்ளதாகவும் திஸ்ஸஹேவா வித்தாரண தெரிவித்துள்ளார்.

RSS Feed
June 20, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment