animated gif how to

யேமனில் பழக்குடியினர் அமைச்சு அலுவலகங்களை கைப்பற்றினர்

May 26, 2011 |

May 26, 2011.... AL-IHZAN World News

யேமன் நாட்டில் அமைச்சர் அலுவலகத்தை பழங்குடிப் படையினர் கைப்பற்றினர். யேமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலே 32 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார். இவருக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக பழங்குடி இன மக்கள் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்துகின்றனர். பழங்குடி இன மக்கள் துப்பாக்கிகளுடன் தலைநகர் சனாவுக்குள் இரவு அதிரடியாக புகுந்து ராணுவத்தினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் திருப்பித் தாக்கினர். இரு தரப்பினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. 
இந்த மோதலில் பழங்குடியினர் கை ஓங்கியது. அவர்கள் தொடர்ந்து முன்னேறி அரசின் யேமனி விமான அலுவலகத்தைப் பிடித்தனர். மேலும் அரசின் செய்தி நிறுவன அலுவலகத்தையும் கைப்பற்றினர். அங்கிருந்த அலுவலர்களை வெளியேற உத்தரவிட்டனர்.

பின்னர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சக அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். புதன்கிழமை காலையிலும் தெருக்களில் துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த மோதலில் பழங்குடியினர் 24 பேரும், ராணுவத்தினர் 44 பேரும் இறந்து விட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!