animated gif how to

குருடர்களாகவும் , ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது கல் வீசவேண்டாம்

May 26, 2011 |

May 26, 2011.... AL-IHZAN Local News

இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவான சுமார் 12 ஆயிரம் பேருக்கு நாட்டில் 28 முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது.
இந்த பயிற்சி நெறி 18 இராணுவ முகாம்களிலும் 2 கடற் படை முகாமிலும் 2 விமான படை முகாமிலும் 4 காலால் படை முகாமிலும் 2 போலீஸ் முகாமிலும் இடம்பெறுகின்றது ஒரு முகாமிற்கு சுமார் 430 மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக கருத்துரைத்துள்ள டாக்டர் அஷ்ஷேய்க் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ்..........
 முகாம்களில் பயிற்சி பெரும் மாணவ மாணவியர் ஆண்கள் , பெண்கள் என்ற வித்தியாசம் இன்றி 25 பயிற்சி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனைத்து பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகவும்  இந்த விடயத்தில் குருடர்களாகவும் , ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு கல் வீசவேண்டாம் என்றும் தான் முஸ்லிம்களுக்கு ஆலோசனை தெரிவிப்பதாகவும்

அடுத்த கட்ட மாணவர் பயிற்சி ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் மற்றும் ஏனையோர் கண்டிப்பாக அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவை சந்தித்து ஆண் , பெண்களை பயிற்சி நடவடிக்கைகளில் வேறுபடுத்துவது பற்றி சீரியசாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை முஸ்லிம் அரசியல் வாதிகளை சந்திக்க அவசர அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
ஆண் பெண் கலந்த உடல் பயிற்சி , முஸ்லிம் பெண்களின் உடை , வதிவிடம் , ஐந்து வேலை தொழுகை , ஜும்மாஹ் தொழுகை ஹலால் உணவு என்பன முஸ்லிம் மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இருக்க மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இராணுவ முகாம்களின் நடாத்தப்படுவது பொதுவான அனைத்து மாணவ மாணவர்களுக்குமான பிரச்சினையாக சுட்டிகாட்டப்பட்டது.
மாணவ மாணவியரை பாதிக்கும் விடையங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் பிரதிநிதிகள் கடந்த 22.05.2011- அன்று அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவை அவரின் இல்லத்தில் சந்தித்து பிரச்சினைகளை தெளிவு படுத்தினர் இதன் பின்னர் கருத்துரைத்த அமைச்சர் முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு முஸ்லிம் மாணவிகள் கலாசாரப்படி உடை அணியவும் அனுமதி என்று தெரிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!