animated gif how to

குவாண்டனாமோ சிறை: விக்கி லீக்ஸ் வெளியிடும் அதிர்ச்சி தகவல்

May 04, 2011 |

May 04, 2011.... AL-IHZAN World News

அமெரிக்கா தான் ஆக்கிரமித்த நாடுகளில் தனக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை குவாண்டனாமோ சிறையில் அடைத்து துன்புறுத்தி வருவதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டாகும். இதில் 48 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு குவாண்டனாமோ சிறைக் கொட்டடியில் வாடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் விக்கிலீக்ஸ் அந்த இருட்டு சிறைக் கொட்டடி குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் இருந்து 2008&ம் ஆண்டு வரை உள்ள ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. 779 கைதிகளில் பெரும்பாலானோர் ஒருபோதும் பயங்கரவாத  செயலில் ஈடுபடவில்லை என அந்த ஆவணங்கள் குறிப்பிட்டன. கிதி என்ற சுருக்கப்பெயரிடப்பட்ட ஆப்கனிஸ்தான் நாடுகள் குறித்த கோப்புகள் மட்டும் 213. சீவிஎன்ற ஏமன் கோப்புகள் 109. இவ்வாறு ஆயிரக்கணக்கான கோப்புகளில் 48 நாடுகளைச் சேர்ந்த கைதிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டாலும்.....

உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை விக்கிலீக்ஸ் வெளியிட் டுள்ளது. 2002&ம் ஆண்டிலிருந்து 2004&ம் ஆண்டுவரை 201 கைதிகளை விடுதலை செய்த அமெரிக்க நிர்வாகம் எந்த குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன, எந்தந்த வழக்கின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

அல்காய்தாவோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏராளமான அப்பாவிகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்த தகவல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!