animated gif how to

இஸ்ரேலிய குழு இலங்கை வந்துள்ளது

May 04, 2011 |

May 04, 2011.... AL-IHZAN Local News
இஸ்ரேல் விவசாய அமைச்சர் ஒரிடி நோகிட்-Orit Noked- உள்ளிட்ட  குழுவினர்  இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது ஒரிடி நோகிட் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் மே மாதம் 3 ஆம்  திகதி இலங்கை வந்து 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து உயர் மட்ட  பேச்சுகளில் ஈடுபடுவதுடன் பிரதமரையும் சந்தித்து பேசுவார்கள் இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து இடம்படும் என்று இஸ்ரேலிய செய்திகள் முன்னர் தெரிவித்திருந்தன.
கடந்த 2000 ஆம் ஆண்டில் இலங்கை இஸ்ரேலுடனான ராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் இரு நாடுகளுகிடையிலான உறவு வலுவடைந்து வருவதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைளிருந்து சுமார் 300 பேர் விவசாய தொழில் பயிற்சிக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பப்பட்டனர் என்பது குறிபிடத்தக்கது.
இஸ்ரேல் விவசாய அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விவசாயத்துறை தொடர்பில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம்.....
விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இவர்கள் இலங்கை வந்துள்ளனர்  இந்த விஜயத்தின் மூலம், விவசாய வசதிகளை மேம்படுத்துவதற்கான தொழிநுட்பம்,.......... விவசாய கொள்கைகள் மற்றும் அனுபவங்கள் என்பன பரிமாற்றிகொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவினைப் பலப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் உயர்மட்ட தூது குழுவென்று கடந்த ஜனவரி மாதமளவில் கொழும்புக்கு வரவுலதாகவும் இவர்கள் இஸ்ரேல் ஆளும் தொழில் கட்சியின் பிரதிநிதி சலோன் சிம்ஹோண் தலைமையில் கொழும்புக்கு வரவுள்ளர் என்று கடந்த வருடம் இறுதி பகுதியில் தகவல்கள் வெளியாகின எனினும் அந்த குழுவினர் வர முன்னர் இஸ்ரேல் விவசாய அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வந்துள்ளமை குறிபிடத்தக்கது.
News: Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!