animated gif how to

சவுதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

May 31, 2011 |

May 31, 2011.... AL-IHZAN World News

சவுதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கா
னோர் 
கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.......

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் சவுதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!