animated gif how to

மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கான உதவிகளை சிலர் குழப்பியடிப்பு - பிரதேச செயலர் கவலை

June 01, 2011 |

June 01, 2011.... AL-IHZAN Local News

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களுள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கான கூரைத்தகடுகள் விநியோகம் பிரதேச செயலாளர் எஸ்.தெய்வேந்திரம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமையன்று யாழ் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்துவெளியிட்ட பிரதேச செயலாளர்

யாழ் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவிலேயே முஸ்லிம் மக்கள் அதிகம் செறிவாக வாழ்கின்றனர், அவர்களது மீள்குடியேற்ற செயற்திட்டம் ஒழுங்குற நடைபெறுவதற்கு நாம் எம்மாலான ஒத்துழைப்புக்களை முழுமையாக எவ்வித பாகுபாடுமின்றி வழங்கிவருகின்றோம். பல்வேறு தடைகளைத் தாண்டியே நிவாரணங்களை எமது மக்களுக்கு வழங்க முடிகின்றது,இந்திய உதவிகள், உலக உணவுத்திட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் யூ.என்.எச்.சீ.ஆர் ஆகியன மீள்குடியேற்றத்தை........
ஊக்குவிப்பதற்கான உதவிகளை வழங்குகின்றன, இவை மீள்குடியேறும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது, இது அவர்களது உரிமையுமாகும், ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் இவற்றை வைத்து அரசியல் இலாபம் ஈட்ட முனைகின்றனர், இதனால் பல சிக்கல்கள் தோன்றுகின்றன, 

தற்போது மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு உலக  உணவுத்திட்டத்தின் உதவிகளும் யூ.என் எச்.சீ.ஆரின் உதவிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன, இதற்கான காரணத்தை மக்கள் சரியாக உணர்ந்துகொள்ள வேண்டும்,யாழ் மாநகரசபை உறுப்பினர் சுபியான் மேற்படி உதவிகளை தனது அரசியல் நோக்கத்திற்காக திசைதிருப்ப முயன்றதன் விளைவாகவே அவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன, அவரால் இங்கே பல குழப்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றது, இப்போது கூறைத்தகடுகள் விநியோகத்தையும் குழப்பியடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார், கூறைத்தகடுகள் அவரின் ஊடாகவே விநியோகிக்கப்பட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு, அது நிகழாதபோது வேறுவகையான காரணிகளை ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றார், இதன் மூலம் மக்கள் குழப்பம் அடைகின்றனர்,இந்தக்குழப்பத்தை தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்துகின்றார், மேற்படி விடயங்கள் குறித்து நான் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன், மீள்குடியேற்ற நடவடிக்கை மாநகர மட்டத்திலான அரசியல் பிரதிநிதிகளினூடாக மேற்கொள்ளப்படும் விடயம் அல்ல, இதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் அரசியல் சார்பில்லாத சமூக அமைப்பு, அவ்வமைப்பினர் மீள்குடியேற்ற செயற்திட்டத்தில் எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றனர், மக்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்தும் பொதுக்கூட்டமொன்றினை எதிர்வரும் நாட்களில் கூட்டும்படி குறித்த சம்மேளனத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.அக்கூட்டத்தில் மீள்குடியேற்ற செயற்திட்டம் குறித்து என்னால் மக்களுக்கு விளக்கமளிக்க முடியும் எனவும் பிரதேச செயலாளர், எஸ். தெய்வேந்திரம் கேட்டுக்கொண்டார்.

யாழ் மாநகரசபை உறுப்பினர் சுபியான் மேற்படி விநியோக நிகழ்வை புரக்கணிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் நேற்று காலை மேற்படி நிகழ்விற்கு சென்ற மக்களையும் வீதியில் வைத்து தடுத்தமையால் சோனகர்தெருப்பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியது, எனினும் கூறைத்தகடு விநியோகத்திற்காக பிரதேச செயலாளரால் தெரிவு செய்யப்பட்ட அனைத்துக் குடும்பத் தலைவர்களும் மேற்படி நிகழ்வில் பங்கேற்று கூறைத்தகரங்களைப் பெற்றுக்கொண்டனர், சுமார் 10,000.00 ரூபா மதிப்புள்ள மேற்படி கூறைத்தகடுகள் இந்திய நிவாரணத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

முதற்கட்டமாக 49 குடும்பங்கள் கூறைத்தகடுகளைப்பெற்றுக்கொண்டன, அடுத்த கட்டமாக மேலும் 50 குடும்பங்களுக்கான கூறைத்தகடுகள் விநியோகம் அடுத்த வார ஆரம்பத்தில் இடம்பெறும்.

தகவல் மூலம்

அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் 

குறிப்பு - மௌலவி சுபியான் மீது தெரிவிக்கப்படும் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவுரடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் அம்முயற்சி பயனளிக்கவில்லை
News: yarlmuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!