animated gif how to

அல் குத்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகள்

May 30, 2011 |

May 30, 2011.... AL-IHZAN World News
S.M.மஸாஹிம்-(இஸ்லாஹி)

அல்குத்ஸ் – பைத்துல் முகத்தஸ் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால்  ஆக்கிரமிக்கப்பட்டு   44 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது அதை நினைவு கூறும் முகமாக பலஸ்தீன் வாலிபர் அமைப்பு -The Muslim Youth Association- நாடு பூராவும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள்,  பேரணிகள் ஆகியவற்றை நடாத்துமாறு பலஸ்தீன மக்களை கோரியுள்ளது.    எதிர் வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி பலஸ்தீன் கிழக்கு ஜெருசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ்- முஸ்லிம் உம்மாஹ்வின் முதல் கிப்லா,   ஜெருசலம், மேற்கு கரை ஆகியன 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
பலஸ்தீன் வாலிபர் அமைப்பு என்ற அமைப்பு நேற்று -29.5.2011- விடுத்துள்ள செய்தியில் நாங்கள் வெற்றியாளர்களாக இருக்க இன்று தீர்மானித்துள்ளோம் ஜெருசலம்,  அல் குத்ஸ், மேற்கு கரை ஆகியன ஆக்கிரமிக்கப்பட்டதை நினைவு கூறும் முகமாக தேசத்தையும் , மக்களையும் விடுதலை பெறச்செய்ய  உறுதியெடுக்குமாறும்  ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராக எழுச்சி பெறுமாறும் போராட்டங்களை அதிகரிக்குமாறும் நாம் அழைப்பு விடுகின்றோம் என்று அந்த தகவலில் குறிபிடப்பட்டுள்ளது...........
துருக்கிய கிலாபத்தின்-உஸ்மானிய -  கீழ்  சுமார் நான்கு நூற்றாண்டுகள் பாதுகாப்பாக இருந்த  ஜெருசலம் 1917 ஆம் ஆண்டு  பிரிட்டன் சாம்ராஜியதால் ஆக்கிரமிக்கப்பட்டது  பின்னர் 1948 ஆம் ஆண்டு  பிரிட்டன் பலஸ்தீனை விட்டு   விலகியது அதே தினத்தில்  இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு  பிரகடனம் செய்யப்பட்டது அதனை முன்பு திட்டமிட்டவாறு பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது அங்கீகாரத்தை வழங்கியது.
இதை எதிர்த்து  பலஸ்தீன் மக்கள் போராட்டத்தில் குதித்தனர் இவர்களுடன்    அரபு முஸ்லிம் நாடுகளில்  படைகளும் களத்தில் இறங்கின ஆனால்  இஸ்ரேலின் முன்கூட்டிய திட்டமிடல் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் உதவி ஆகியவற்றால் இஸ்ரேல் களத்தில் வெற்றிகளை குவித்தது 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  அரபு இஸ்ரேல் யுத்தமாக பரிமாணம் பெற்றது  அந்த யுத்தத்தில் எகிப்து, சிரியா , ஜோடான் போன்ற அரபு முஸ்லிம் நாடுகள் இஸ்ரேளிடம் தோற்றது.
விளைவு பல அரபு முஸ்லிம் பிரதேசங்கள் உட்டபட  அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ் – பிரதேசமும்  5.6.1967 அன்று ஆக்கிரமிப்புக்கு உள்ளானது இன்று வரை அதை முஸ்லிம்களினால் மீட்க முடியவில்லை மேற்கு உலகம் உருவாக்கிய இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா  இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்பு அரணாக அமெரிக்க இருக்கும் என்று கூரியமையும் சுட்டிக்காட்டதக்கது இந்த நிலையில் எதிர் வரும் ஜூன் 6 ஆம் திகதி முஸ்லிம் உம்மாஹ்விம் முதல் கிப்லா இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு 44  ஆண்டுகள்  பூர்தியாகின்றது.
கிலாபத்தில் பறிகொடுத்ததை கிலாபத் இன்றி மீட்பது  44 ஆண்டுகளாக மிகவும் சிரமமாகத்தான் உள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!