animated gif how to

இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்க்கு பயிற்சி 3 மாத காலம் நீடிப்பு

May 31, 2011 |

May 31, 2011.... AL-IHZAN Local News

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு படைமுகாம்களில் தற்போது வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சிக்கான காலம் போதாமையினால், அடுத்த வருடத்தில் இருந்து இப்பயிற்சிக் காலத்தை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை அதிகரிக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிக் கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற் றியபோதே, உயர்கல்வி அமைச்சர் திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.அவர் தனது உரையில் மேலும்......
தெரிவித்துள்ளதாவது, 

தற்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் எவ்விதமான இராணுவப் பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை. இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கோ, குண்டுகளை வீசுவதற்கோ அல்லது யுத்த ஆயுதங்களை இயக்குவதற்கோ பயிற்சி வழங்கப்படவில்லை.

பல்கலைக்கழங்க மாணவர்களிடம் பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த மாணவர்களின் உடுதுணிகளை இன்னும் அவர்களின் தாய்மார்களே கழுவிக்கொடுக்கின்றனர். இவர்கள் சாப்பிடப் பயன்படுத்தப்படும் கோப்பைகளையும் இவர்களின் தாய்மாரே கழுவுகின்றனர். இவ்வகையில் பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் மாணவர்கள் பூரணமற்ற நிலையிலேயே உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி அறைகளை நான் பார்த்துள்ளேன். அது அழுக்குப் படிந்தும், துர்நாற்றம் கொண்டதாகவும் காணப்பட்டன. அவர்களின் சாப்பாட்டு எச்சங்கள் அவர்களுடைய கட்டிலின் கீழ் காணப்பட்டுள்ளன. எனவே இந்த மாணவர்களை நாம் சிறந்தவர்களாக மாற்ற வேண்டும்.

சரியாகப் பார்த்தால் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்களுக்குத் தற்போது வழங்கப்படும் 21 நாட்களைக் கொண்ட பயிற்சிநெறி போதாது. அடுத்தவருடம் முதல் இரண்டு முதல் மூன்று மாதமாக இந்தப் பயிற்சிநெறியின் காலத்தை நாம் அதிகரிக்கவுள்ளோம். என அவர் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!