April 03, 2011.... AL-IHZAN World News
திரிபோலி:மேற்கத்திய ராணுவத்தின் விமானத்தாக்குதலில் லிபியாவில் எதிர்ப்பு போராளிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.ப்ரீகாவுக்கும், அஜ்தாபியாவுக்குமிடையே சென்றுக்கொண்டிருந்த எதிர்ப்பு போராளிகளின் வாகனங்கள் மீது மேற்கத்திய ராணுவம் குண்டுவீசித்தாக்கியது.
ப்ரீகாவை நோக்கிச்சென்றுக்கொண்டிருந்த எதிர்ப்புபோராளிகள் வெற்றிப்பெற்றதை சுட்டிக்காட்ட வானத்தைநோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இதுதான் மேற்கத்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு காரணமென பி.பி.சி கூறுகிறது.
இதற்கிடையே எதிர்ப்பாளர்களின் போர் நிறுத்த அறிவிப்பை லிபியாவின் அரசு நிராகரித்துவிட்டது.எதிர்ப்பாளர்களின் வசமிருக்கும் நகரங்களை கத்தாஃபியின் ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாகவும், இங்கிருந்து வாபஸ் பெறுவதற்கான எவ்வித நடவடிக்கைக்கும் தயாரில்லை என அரசு செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹீம் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை மேற்கத்திய ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், மனித தன்மையற்ற கொடுஞ்செயல்களை மேற்கத்திய ராணுவம் நடத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஸாவியல் அர்கோபில் வெடிக்குண்டுகளுடன் சென்றுக்கொண்டிருந்த அரசு வாகன அணிவகுப்பின் மீது நடந்த மேற்கத்திய தாக்குதலில் நான்குபேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்தின் மருத்துவரை மேற்கோள்காட்டி பி.பி.சி தெரிவிக்கிறது.
குண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரக்கின் மீது குண்டு தாக்கியதைத்தொடர்ந்து வாகனம் சின்னாப்பின்னமாக சிதறியது. சம்பவத்தில் அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களும் பாதிக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.வெளியுறவு அமைச்சர் மூஸா கூபா மற்றும் இரண்டு அமைச்சர்களின் அணி தாவலுக்கு பிறகு லிபியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல்ஃபதஹ் யூனுஸ் எதிர்ப்பாளர்கள் அணியில் சேர்ந்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment