March 31, 2011.... AL-IHZAN Local News
முன்னூறு கோடி ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை 31ம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்த வைக்கவிருக்கின்றார்.
சவூதி அரேபியாவின் அபிவிருதிக்கான நிதியத்தினதும், இலங்கை அரசாங்கத்தினதும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியின் வளாகத்தில் இந்தப் புதிய நரம்பியல் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
பத்து மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப்பிரிவில் ஹெலிகொப்டர்கள் இறங்கக் கூடிய தளத்தையும் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்த நரம்பியல் சிகிச்சை பிரிவு மூலம் விபத்துக்களுக்கு உள்ளாகின்ற வர்களுக்கான சிகிச் சைகள் மேலும் மேம்பாடு அடையும் எனவும் அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment