April 03, 2011.... AL-IHZAN Local News
கல்முனையின் பிரபல பாடசாலைகளான ஸாஹிரா தேசியக் கல்லூரி, மஹ்மூத் மகளிர் கல்லூரிகளிலிருந்து க.பொ.த உயர்தரம் பயில்வதற்கு 433 பேர் தகுதி பெற்று கல்முனை வலயத்திலும் தேசிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலும் சாதனை படைத்துள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதரணதர பரீட்சை முடிவுகளின்படி மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் 4 மாணவிகளும் ஆங்கில மொழி மூலம் 2 மாணவிகளுமாக 6 மாணவிகள் 9 பாடங்களிலும் “ஏ’ தரச்சித்தியையும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஒரு மாணவனும் அதிதிறமைச் சித்திகளைப் பெற்றுள்ளனர்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் ஏ.ஏ.எப்.இன்சிராஹ், எம்.ஐ.எப்.ஸஹானா, எம்.எச்.எப்.நுஸ்ரா பானு, எம்.ஐ.எம்.எப்.அப்ஸானா அபாப், எஸ்.ஐ.எம்.எப்.நுப்லா, ரீ.எச்.ஆர்.ஆகானி, ஆகிய மாணவிகளும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் எம்.எப்.அஹமட் றிபாத் என்ற மாணவனுமே சகல பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 96 வீதமான மாணவிகள் சித்தியடைந்திருப்பதுடன், 273 மாணவிகள் உயர்தரம் கற்கத் தகுதிபெற்றுள்ளதுடன், கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் 85 வீதமான மாணவர்கள் சித்தியடைந்திருப்பதுடன் 196 மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதிபெற்றுள்ளனர்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம், தோற்றிய மாணவிகள் 100 வீதம் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை முடிவுகளைப் பெறுவதற்கு காரணமாக அமைந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதித் தலைவர்களுக்கு மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட், ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
News:-தினக்குரல்
RSS Feed
April 03, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment