March 30, 2011.... AL-IHZAN World News
திரிபோலி:எதிர்ப்பாளர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி கத்தாஃபியின் ராணுவத்தினர் தீவிரமாக பதிலடியை கொடுத்து வருகின்றனர்.
கத்தாஃபியின் சொந்த நகரமான ஸிர்த்திற்கு முக்கிய பாதையில் அமைந்துள்ள பின் ஜவாத் நகரத்திலிருந்து எதிர்ப்பாளர்களை கத்தாஃபியின் ராணுவத்தினர் வெளியேற்றியுள்ளனர்.
ஸிர்த்தை கைப்பற்றியதாக நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். மேற்கத்திய ராணுவத்தின் விமானத்தாக்குதலின் பின்னணியில் எண்ணெய் நகரமான அஜ்தாபியை கைப்பற்றி முன்னேறும் எதிர்ப்பாளர்கள் மீது கத்தாஃபியின் ராணுவம் தீவிரமாக குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியது.
இதற்கிடையே மிஸ்ரத்தாவில் மூன்று லிபியாவின் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் பலத்த தாக்குதலை நடத்தியுள்ளது.
RSS Feed
March 30, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment