March 30, 2011.... AL-IHZAN World News
டமாஸ்கஸ்:கடந்த சில வாரங்களாக தொடரும் அரசுக்கெதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தணிப்பதற்காக சிரியாவின் கேபினட் அமைச்சரவை ராஜினாமாச் செய்துள்ளது.
1963-ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அவசரச் சட்டத்தை வாபஸ் பெறவும், அரசியல்-குடியுரிமை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டை நீக்குவதுக் குறித்தும் உடனடியாக அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாத் பிரகடனப்படுத்துவார் என செய்திகள் கூறுகின்றன.
2003-ஆம் ஆண்டுமுதல் பதவியில் தொடரும் 32 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையின் ராஜினாமாவை அதிபர் அங்கீகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கிறது.
புதிய அரசு உருவாகும்வரை தற்போதைய அமைச்சரவை தொடரும். ஆனால், பெரும்பான்மையான அதிகாரங்களை தம் வசம் வைத்திருக்கும் அதிபரை இந்த ராஜினாமா பாதிக்காது.
11 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் பஸ்ஸார் அல் ஆஸாதின் ராஜினாமாவைக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment