animated gif how to

ஒலுவில் பிரதேசத்துக்கு சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றம்

March 30, 2011 |

March 30, 2011.... AL-IHZAN Local News

ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படுமென நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேசத்தையும், அட்டாளைச்சேனை பிரதேசத்தையும் உள்ளடக்கியதாக ஒலுவில் துறைமுகத்தை அண்டிய ஓர் இடத்தில் புதிய பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
ஒலுவில் துறைமுகத்தை அண்மித்துள்ள இரண்டு ஏக்கர் நிலம் இதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், பொலிஸ் நிலைய நடவடிக்கைகளும் மிக நீண்ட தூரம் பிரயாணம் செய்து பல்வேறு அசெளகரியங்களை மக்கள் எதிர் கெண்டு வருவதனை கவனத்தில் கொண்டு ஒலுவிலில் புதிய நீதிமன்றமும் புதிய பொலிஸ் நிலையமும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விரிவாக
இதனால் ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, உதுமாபுரம், அஸ்ரப் நகர், திராய்க்கேணி, சின்னப் பாலமுனை ஆகிய கிராம மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.- 
News: தினகரன்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!