animated gif how to

முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்த சமூகமாக மாறவேண்டும் - அகார் முஹம்மத்

March 31, 2011 |

March 31, 2011.... AL-IHZAN Local News

சகல மட்டங்களிலும் முஸ்லிம் சமூகம் தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு தலைநிமிர்ந்த சமூகமாக மாறவேண்டும் என்றால் அச்சமூகம் அறிவூட்டப்படுவது அவசியம். இதற்கான சரியான வழி ஊடகங்களேயாகுமென அஷ்செஷய் கலாநிதி அகார் முகம்மத் தெரிவித்தார்.

கொழும்பில் முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி அகார் முகம்மத் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

உலகில் பல வேகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றங'களுக்கு பின்னால் ஊடகங'களும, ஊடகவியலாளர்களும் உள்ளனர். ஊடகப் பணியை ஒரு சேவையாக கருதுவது முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அவசியமாகும். ஊடக அறிக்கையிடலில் நடுநிலையுடன் அமைதல் வேண்டும்.விரிவாக
இன்றைய இஸ்லாமிய உலகத்திற்கு 3 வகையான மனிதர்கள் தேவைப்படுகின்றனர். முதலாவது சாரார் புத்திஜீவிகள், அடுத்த சாரார் துறைசார் நிபுணர்கள், மூன்றாவது தரப்பினர்தான் ஊடகவியராளர்கள். இதன்மூலம் ஊடகத் தொழில் எவ்வளவு தூரம் மகத்துவமிக்கது என்பதை நாம் அறிகிறோம்.

முஸ்லிம் சமூகத்தை அறிவூட்ட ஊடகங்களை நாம் கொண்டிருப்பது அவசியம். ஊடகங்களின் சொந்தக்காரராக நாம் இருத்தல் வேண்டும். உண்மையை உரத்துச் சொல்லும் ஊடகம்தான் இந்தகாலத்து ஜிஹாத் ஆகும் என்றார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!