March 24, 2011.... AL-IHZAN Local News
லிபியா மீதான மேற்கு நாடுகளின் தாக்குதலை கண்டித்து நாளை வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் நாட்டின் பரவலான ஆர்பாட்டங்கள் நடாத்தப்பட்ட உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இந்த ஆர்பாட்டங்கள் யாரால் ஒழுங்கு செய்யபடுகின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை கொழும்பு பெரிய பள்ளி வாசலில் இடம்பெறவுள்ள கண்டன கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா ஆகியோர் கலந்து கொள்வுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
லிபியா மீதான தாக்குதலை கண்டித்து நேற்று பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கொண்டு வரப்பட்டது அந்த பிரேரணை மீது உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் ஜி .எல் . பீரிஸ் இலங்கை மேற்கு நாடுகளின் லிபியா மீதான தாக்குதல்களை ஐநா உறுப்பு நாடு என்ற வகையில் அங்கீகரிக்கவோ ஏற்றுகொள்ளவோ இல்லை என்று தெரிவித்துள்ளார் விரிவாக இந்த பிரேரணை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச். எம் . அஸ்வர் கொண்டு வந்திருந்தார் லிபிய ஜனாதிபதி கடாபி இலங்கை ஜனாதிபதி மகிந்தவுடன் நெருங்கிய தோழமை கொண்டவர் என்பதும் சில வாரங்களுக்கு முன்னரும் இருவரும் தொலைபேசியில் உரையாடியமையும் , லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மேற்கு நாடுகளில் வேலைதான் என்று ஜனாதிபதி தனிப் பட்ட முறையில் தெரிவித்திருந்தமையும் குறிபிடத்தக்கது.விரிவாக
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா ஆகியோர் கூட்டாக விடுத்த வேண்டுகோளில் லிபியா மீது மேற்குலக வல்லரசுகள் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு விரோதமாக ‘ஜும்ஆ’ப் பிரசங்கங்களில் தெளிவு படுத்தி அந்த அப்பாவி மக்களுக்காகப் பிரார்த்திக்குமாறு வேண்டியிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது
துனுசியா , எகிப்து அதை தொடர்ந்து லிபியா என்று தொடர்ந்த மக்கள் எழுச்சி துனுசியா , எகிப்து ஆகிய நாடுகளில் அந்த நாடுகளின் அரச தலைவர்களை பதவி நீக்குவதில் வெற்றி கண்டபோதும் லிபியாவில் கடாபியின் கடுமையான எதிர்ப்பால் மக்கள் எழுச்சி ஆயுத போராட்டமாக மாறியுள்ளது 42 வருடங்கள் ஆட்சி செய்த இடதுசாரி சோஷலிச சார்பு காடபி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் ஆயுதங்களை ஏந்தியுள்ளனர் இவர்கள் மீது கடாபியின் நிர்வாகம் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
லிபியாவில் மக்களை கடாபி கொலை செய்கின்றார் உடனடியாக மக்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு சபையில் மேற்கு நாடுகள் தீர்மானம் மேற்கொண்டது லிபியா மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதியை ஐநா பாதுகாப்பு சபை நிறைவேற்றியது இதை தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் மேற்கு நாடுகளின் கூட்டு படைகள் லிபியாவின் இராணுவ முகாம்கள், ஆயுத தொழிச்சாலைகள், துறைமுகங்கள், விமானங்கள், விமான ஓடு பாதைகள இராணுவ வாகனங்கள் கடாபியின் மாளிகைகள் போன்றவற்றை இலக்கு வைத்து நேற்று வரை 162 ஏவுகணைகள் ஏவியுள்ளது, நூற்றுக்கணக்கான விமான குண்டுகள் வீசப்பட்டுள்ளது பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கடாபி நிர்வாகம் அறிவித்துள்ளது அந்த அறிவிப்பை மேற்கு நாடுகளின் படைகள் மறுத்துள்ளது .
மேற்கு நாடுகள் லிபியாவில் நுழைந்து இருப்பது மக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது அல்ல லிபியாவின் எண்ணெய் வளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துகொள்ளவும் லிபியா முழுவதும் இன்னும் தொட்டும் கூட பார்க்காத நிறைந்த எண்ணெய் மற்றும் கேஸ் வளம் முதலானவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவும் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த லிபியா மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை ‘நேடோ’ விடம் ஒப்படைக்கவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது இல்லை எம்மிடம் இருக்கட்டும் என்று பிரான்ஸ் கூறுகின்றது நேடோ விடம் ஒப்படைக்கவேண்டும் அப்படி ஒப்டைத்தாள்தான் எனது விமான நிலையங்களை தாக்குதல்களுக்கு பயன்படுத்த அனுமதிப்பேன் என்று இத்தாலி கூறுகின்றது.
இத்தாலி லிபியாவில் அதிகமான முதலீடுகளை செய்துள்ளது அதிகமான பொருளாதார ஒப்பந்தங்களில் லிபியாவுடன் கைசாத்துள்ளது இவற்றை பிரான்ஸ் தட்டி சென்றுவிடும் என்று இத்தாலி அஞ்சுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் லிபியாவின் வளங்களை எப்படி நவீனமாக கொள்ளையடித்து அவற்றை பங்கு போடலாம் என்ற கொள்ளை பங்கீட்டு சண்டையில் இப்போது மேற்கு நாடுகள் ஈடுபட்டுள்ளது , கடாபியை மக்கள் எதிர்கின்றனர் என்பது உண்மை கடாபி பதவி விலக வேண்டும் என்று மக்களின் கோரிக்கைகள் நியாயமானது ஆனால் மேற்கின் தாக்குதல்கள் சீரான விரைவான ஆட்சி மாற்றத்தை கொண்டுவராது என்பதாகத்தான் விமர்சிக்கப்படுகின்றது.
ஐநா பாதுகாப்பு சபை வழங்கியுள்ள அனுமதி மக்களை பாதுகாக்க அல்ல லிபியாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்கவும் முஸ்லிம் நாடுகளை தொடர்ந்தும் மேற்கு நாடுகள் தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கவும் கொடுக்கப்பட்ட அனுமதி என்று விமர்சிக்கப் படுகின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment